இஸ்ரவேலின் புத்திரர்கள் Phoenix, Arizona, USA 47-1123 1ஆயிரம் ஆயிரமான மக்கள் கலந்து கொண்டனர் ஒவ்வொரு இரவும், எப்படியாகிலும் நாங்கள் சிலரை திருப்ப அனுப்பவேண்டியிருந்தது... கட்டிடம்... மூன்று முதல் ஐந்தாயிரக்கணக்கான மக்கள் எங்கேயோ இருந்து... ஆராதனைக்கு இல்லாமல் போகவேண்டியதாயிற்று தேவன் குருடரின் கண்களைத் திறந்தார் செவிடர், ஊமையர், முடவர்கள் சுகம் பெற்றனர் அது மகிமையாய் இருந்தது கடந்த வாரம் நான் அங்கு இருந்தேன். ஃபீனிக்ஸிலிருந்ததற்குப் பின்னர் ஒரு நாள் எனக்குக் காலதாமதமாகி விட்டது. எனவே அங்கு கீழே கொண்டுவரப்பட்டு... இந்த வாரம் இங்கு வர முடிந்தால், எனவே அதுவரை வெளியே வரமுடிந்தால்... மீண்டும் திரும்பிவருவேன். 2நான் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை காலையில் புறப்பட்டேன். கடந்த இரவே நான் இங்கு இருக்க வேண்டியிருந்தது, ஆனால் சிறிது நேரத்திற்கு முன்புதான் வந்தேன், ஆகவே பதினெட்டு மணிநேரம் படுத்திருந்தேன் காலதாமதம், சிறிது நேரத்திற்கு முன்பு கூட நான் சரியாகவில்லை நேற்றிலிருந்து அதற்கு முந்தைய இரவும் நான் தூங்கவில்லை எனவே நான் சற்று களைப்புற்றுள்ளேன். நிறைய பேர் இருக்கலாம், நேற்றைக்கு முன்புதான் இரவில் நான் ஏறக்குறைய மூவாயிரம் மக்களுக்காக ஜெபித்தேன். சரியாக ஒரே இரவில் தனியாக.. ஆகவே யாரானாலும் யூகியுங்கள், எவ்வளவு களைப்பாகயிருக்குமென்று. ஆனால் ஃபீனிக்ஸ் போவது என்பது எப்போதும் நன்றாக இருக்கும் என நான் சொல்லுகிறேன் இந்த இடத்தைக் குறித்து... எனக்கு உண்மை யாகவே பிடிக்கும் அன்றொரு நாள் சில சகோதரர்களுடன் அந்த மலையின் மீது ஓடி, கீழே பார்க்கும் ஒரு சில தருணங்கள் கிடைத்தது மேலே... நான் இருந்த இடத்திலிருந்து... நான் மேலே சென்று கீழே பார்த்தேன் ஓ... எப்படி பரலோகம் போல இருக்கிறது என்று நினைத்தேன், நீங்கள் எப்படி... ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள் இது மிகவும் எளிமையானதும் எனக்குத் தெரிந்தவரை, எறக்குறைய பரலோகத்தைப் போன்றும் இருப்பதாக நான் நினைக்கிறேன், தொல்லை என்னவெனில் நாம் இதை அப்படி சரியாக இந்த இடத்தைப் பாராட்டுவதில்லை. அது வருத்தமாயுள்ளது. அது சரியே, இந்த உலகத்தின் ஆச்சரியமான இந்த இடத்தை தேவன் நமக்குக் கொடுத்துள்ளார், அதை கவனமாக பார்த்துக் கொள்ளக்கூடுமானால்... பாருங்கள், ஆனால் நாம் அவ்வாறு செய்வதில்லை. 3ஆகவே இப்போது... நம்முடைய... இது நம்முடைய... இது நமக்கு நான்காவது ஞாயிற்றுக்கிழமையாக இருக்கிறது. இல்லையா? இன்னும் நாலு ஞாயிறுகள் நமக்கு உள்ளன. இந்த ஞாயிறை நான் விட்டுவிட்டேன் கர்த்தர் அனுமதிப்பாரானால் அற்புதங்கள் இந்த ஞாயிறு நடக்கும்படியாக மற்றெதும் இல்லாமல் தேவன் அனுமதித்தால் பெரும்பாலான மக்களுக்காக அல்ல ஊனமும் பாதிக்கப்பட்டதுமான மக்கள் இக்கூட்டத்தில், கண்கூடாகப்பட்ட துமான சுகமளித்தலைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கட்டும். அது பயங்கரமான ஒன்றாயிருக்கும், உங்களுக்குத் தெரியுமா?... நான் அப்படிக் கூறி நான் தவறு செய்வதாக உணருகிறேன் முதன்மை இடத்தில் அப்படிச் செய்வது சரியல்ல அது... என்னுடைய வரம், அற்புதம் அல்ல, எனது வரம், நோயாளிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஜெபிப்பது தான் அது சுகம் பெறுதல். அற்புதமல்ல, என்னை மிகவும் மன்னியுங்கள் யாருக்கும் முன்பதாக நான் அற்புதம் நிகழ்த்த ஒருபோதும் தீர்மானம் செய்யவில்லை , நான்... ' 4கடந்த இரவுக்கு, முன்னிரவு கர்த்தரின் தேவ தூதன் என்னிடம் பேசியபோது... ஆறுமாதங்களாக.... முதன்முறை என்னுடைய அறையில் மீண்டும் அவரைப் பார்த்தபோது... அவர் என்னிடம் பேசவில்லை, நான் திரும்பிப் பார்த்தபோது கதவின் அருகே என்னைப் பார்த்த போது கதவின் அருகே நின்றுகொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார் நான் உடனடியாக, முகங்குப்புற விழுந்தேன் ஆனால், மீண்டும் நான் மேலே எழுந்தபோது அவர் மீண்டும் போய் விட்டிருந்தார், எனவே..... ஆனால் கடைசி முறை என்னிடம் அவர் பேசினார் கடந்த வாரம் நான் சொன்னது போல இலினாய்ஸில், வண்டாலியாவில் இருக்கும்போது என்னிடம் அவர், அற்புதங்கள் நடப்பதற்கென, அதிகமாக நான் வேலை செய்வதாகவும் கூறினார். மக்கள் அற்புதங்கள் நிகழாத பட்சத்தில் என்னை விசுவாசிக்க மாட்டார்கள். அது உண்மை அது அப்படியான பாதையாக உள்ளது. அவர்களுக்கென ஜெபிக்கப்படுவதை அவர்கள் உணருவதில்லை. 5கடந்த வாரம், வினோதமான ஒன்று எனக்கு ஏற்பட்டது அப்படியே, உங்களில் அநேகர் ஓரிகானில் உதவி செய்ய வந்திருக்கிறீர்கள். நான், நாம் எல்லோரும் கிறிஸ்தவர்கள், நல்லதொரு செய்தி அறிக்கையைக் கேட்க விரும்புகிறோம் இல்லையா? நான் சங்கை. கார்டன் லின்ட்சேயுடன் இருந்தேன் எல்லா சபைகளும், ஒன்றுகூடி பாப்டிஸ்டு முதலானவைகளுக்குக் கூட ஒத்துழைக்கின்றன. மாகாணத்தின் ஆளுநர், மற்றும் முன்னிலை மருத்துவர்களும் கூட முன் வந்தனர் மக்களுக்கு முன்பு கர்த்தர் எனக்கு தமது கிருபையைத் தந்தார். மேலும் அது ஒரு ஆச்சரியமான மற்றும் மகிமை நிறைந்ததுமான கூட்டமாக எங்களுக்கு அமைந்தது ஆயிரமாயிரக் கணக்கான மக்கள்... கனடாவில் நடந்த கூட்டங்களிலேயே இதுதான் அதிகமான வருகையாளர்களைக் கொண்டிருந்தது என நான் நம்புகிறேன் கனடாவில் நடந்த, கனடா நாட்டு மக்களுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் நிச்சயமாக இதுவே சிறந்ததொன்றாகும். கர்த்தர் எவ்வளவாக அவர்களிடம் இடைப் பட்டார். ஒரு கூட்டத்திலேயே சுமார் முப்பத்தைந்தாயிரம் மக்கள் இருந்தனர், அவர்களுக்குப் போதுமான இடவசதி கிடைக்கவில்லை. ஜனநெருக்கத்தில், அந்த அரங்கங்களில் அவர்களை பொறுப்பேற்க வேண்டியிருந்தது ஆனால் அருமையான கர்த்தர் ஆச்சரியவிதமாய் அவர்களுடன் இடைப்பட்டு வல்லமையான அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன. 6நான் சிறிது நேரம் தான் பேசப் போகிறேன் இன்னும் கொஞ்சம் அதிகமான நேரத்தை எடுக்க விரும்புகிறேன், எதனால் எனில் அற்புதங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன், ஒரு அற்புதம். வேதாகமத்தில் இது எழுதப்பட்டுள்ளது. இந்த மத்தியான வேளையிலே, நான் எதை எடுக்க முயற்சிக்கிறேன் என்பதை இங்குள்ள அநேகர் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் இதைச் செய்த காரணத்தை நீங்கள் அறிவீர்களா? இந்த மத்தியான ஆராதனையின் நினைவுகளைக் குறித்து நான் நடுக்கமுற்றுள்ளதை தேவன் அறிவார், அது சரிதான் ஏனெனில் எனக்கு முன்பதாக நொண்டி, குருடு, காயப்பட்டவர், கரடுடையவர் முதலானவர் இருந்தனர் நான் உங்களிடம்... சொல்ல வந்ததை என்ன..... நான்... நான் சொல்கிறேன். இப்போது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முதலிடம் இதற்கு எதிராக என்னை தேவன் வைக்கமாட்டார் என்று நம்புகிறேன், நீங்கள் கவனித்தீர்களா? மேடை என்னைச் சுற்றிலும் கூட....? நான்..... இவ்வாறு இருக்க வேண்டியுள்ளது (ஒலிநாடாவில் காலியிடம்) பார்வையாளர் மூலமும் என்னுடைய நண்பர்களே, இம்மத்தியான நேரத்திலே உங்கள் கவனத்தையும், பயபக்தியையும் தருவீர்கள் என்று நம்புகிறேன், (ஒலிநாடாவில் காலியிடம்... ஆசி) 7அவர் தம்முடைய வல்லமையைக் காண்பிக் கும்படியாக ஜனங்களை சுகமாக்கவில்லை. சாத்தான் ஜனங்கள் மத்தியில் அவரைக் காட்சிப் பொருளாகக் கொண்டு வர முயற்சித்தான். நீங்கள் பாருங்கள், அது பிசாசினுடைய சோதனையாயுள்ளது. ஆனால், அவன் அவரிடம் வேதவாக்கியத்தை எடுத்துக் கொடுத்து, 'உம்முடைய பாதம் எந்த வேளையிலும் ஒரு கல்லில் கூட இடறாதபடிக்கு உம்மைக் குறித்துத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார்' என எழுதுயிருக்கிறதே என்றான். ஆனால் இயேசு... (ஒலிநாடாவில் காலியிடம்) கிறிஸ்து தம்மிடத்தில் வந்த எல்லா மக்களையும் சுகப்படுத்தவில்லை, அவர் எல்லா நோயாளிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் சுகமாக்க வில்லை, குறிப்பிட்ட சிலரை மாத்திரமே, அவர் யாரை குணமாக்க நடத்தப்பட்டாரோ அவர்களைக் குணமாக்கினார். அவ்விதமாகவே கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாக் கூட்டங்களும் என்னைப் பதிவாக்கு கின்றன. இப்போது நாட்டில் நிறையபேர் உள்ளனர் குறிப்பிடும்படியான மிகச்சிறந்த அற்புதங்கள் நடந்துள்ளன. 8மற்றொரு இரவில், ஊமைகளுக்காக நடத்தப்படும் ஒரு பள்ளிக்கூடத்துக் குழந்தையைக் கொண்டு வந்தனர் என்னுடைய இந்த ஊழியத்தில் இத்தனை நாட்களும், இவ்வளவு அதிகமான செவிடரும், ஊமையுமான வர்களை ஒன்றாக நான் பார்த்ததில்லை அந்த வரிசையில் இருந்ததெல்லாம் ஊமையரும், செவிடரும்தான். நான் நிறுத்திவிட்டேன். நான் அவர்களுக்காக ஜெபித்தேன். மேலும் நான் நிறுத்திவிட்டு ஏன் இத்தனை ஊமையர்? என்று கேட்டேன். பன்னிரண்டு வயதுடைய ஒரு சிறுமி அங்கிருந்தாள் அவளிடமிருந்து ஒரு ஆவி துரத்தப்பட்டது மிகவும் பரிதாபமான அந்த சிறுமியை விட்டு அந்த ஆவி துரத்தப்பட அவள் பேசவும், கேட்கவும் ஆரம்பித்தாள். அடுத்த நாள் இரவு, அச்சிறுமியால் பேசவும், கேட்கவும் முடியவில்லை என்று திரும்பவும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். செவிலியுடன் அவருடைய மருத்துவரும் கூட வந்திருந்தார் அவள் மேடையில் இருந்தபோது அவள் பேசுவதை அவர்கள் கேட்டதாகக் கூறினர். அதுவும் மேடையில் இருந்தபோது அவள் பேசினாள் நல்லது அவளைப் பின்னாகக் கொண்டு வந்தார்கள் (சகோ. பிரன்ஹாம் தம் கரங்களை தட்டுகிறார் ஆசி) தங்கள் கரங்களை அவ்வாறு தட்டினார்கள். அவளுக்குக் கேட்கவில்லை விரல்களைச் சொடுக்கினார்கள் அவள் எதாவது பேசுவாளா என்று முயற்சி செய்தனர் அவள் பேசவில்லை. விரல்களைக் கொண்டு இவ்விதமாகச் செய்தும் அவள் பேசவில்லை சகோ. பிரன்ஹாம் மீண்டும் கரங்களைத் தட்டுகிறார் ஆசி) அவர்கள் அவ்விதமாகத் தங்கள் கரங்களைத் தட்டினர் அவளுக்குக் கேட்கவே இல்லை முந்தைய இரவு அவளால் பேசவும், கேட்கவும் முடிந்தது. அப்போது அவர்கள் அவளிடமிருந்து எதையாவது பேசவைக்க முயற்சி செய்தனர். அவர்கள் டாடி அல்லது மாம் என்று அது ஏதாவது சொல்ல வைத்தனர் அவளும் அவ்வாறு செய்ய முயற்சித்தாள் (சகோ. பிரன்ஹாம் விளக்குகிறார் ஆசி) வேறு எதுவுமே அவளால் பேசமுடியவில்லை. 9எனக்கு அக்குழந்தையை ஞாபகம் இருக்கிறது. நான் பிறகு, நல்லது அவளை மீண்டும் இங்கு கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அச்சிறு பிள்ளையை அவர்கள் கொண்டு வந்தனர். அந்த ஆவியை அவளை விட்டுத் துரத்திய பின்பு, நான் அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன் (சகோ.பிரன்ஹாம் விரல்களை சொடுக்குகிறார் ஆசி) நான் அப்படிச் செய்தேன் அவள் திரும்பினாள், குதித்தாள். அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தாள் நான் கரங்களைத் தட்டி... அவ்வாறு செய்யும்போது அவள் திரும்பிப் பார்த்து சத்தத்தைக் கேட்டாள் நான் அம்மா என்று சொல்ல அவளும் அம்மா என்று சொன்னாள் நான் அப்பா என்று என் நாவில் எப்படிச் சொல்ல வேண்டும் என்றபோது அவளும் அப்பா என்று கூறினாள். இப்பொழுது மேடையிலும் அவளால் பேசவும் கேட்கவும் முடியும். அதன்பிறகு நான் அவர்களிடம், 'இது ஒரு மனமாற்றம் போன்றதுதான்' போன்றது இன்றிரவு நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கலாம்; நாளை ஒரு பாவியாக இருக்கலாம், நீங்கள் விசுவாசித்து தேவனைப் பிடித்துக் கொண்டு இருக்கலாம் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசமுடன் இருக்கலாம், இப்போது, நான் கேட்கிறேன். ஏன் நிறையபேர் செவிடராயும், ஊமையாயும் இருக்கிறார்கள்? 10அவர்கள், ஏறக்குறைய ஏழு வயதுடைய ஒரு சிறு பெண்ணை என்னிடம் கூட்டி வந்தனர் அவள் பிறப்பிலேயே செவிடாயும், ஊமையாயும் இருந்தாள் அவள் பேசிக்கொண்டும், கேட்கக்கூடியவளாகவும் இருந்தாள். ஓரிகானில் செவிடு மற்றும் ஊமைகளுக்கான ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. நான் சரியாக அதற்கு அருகாமையில் அப்படியாக இருந்தேன். அவர்கள் அங்கு எல்லாச் செவிடும் ஊமையுமானவர்களை, அந்தப் பெண்ணின் நிமித்தமாகக் கொண்டு வந்தார்கள் அவளை அங்கு வைக்க முடியாமல், இங்கு மீண்டும் கொண்டுவந்தார்கள். எனவே, ஏறக்குறைய இருபது அல்லது இருபத்தைந்து செவிடு மற்றும் ஊமையான மக்கள் கடந்த வாரம் சுகம் பெற்றனர் என்று யூகிக்கிறேன். நிச்சயமாக மேடையிலே பேசினார்கள், கேட்கவும் செய்தார்கள். ஆனால், இப்போது, அவர்கள் எல்லோரையும், நான் தேர்ந்தெடுக்க வில்லை, அப்படி அவர்கள் வரும்போது விசுவாசத்தின் அழுத்தத்தை என்னால் உணரமுடிகிறது. இப்போது ஒருவேளை அது என்னுடைய விசுவாசம் வெளிப்படுகிறதாய் உள்ளதா? 11இப்போது நண்பர்களே, இந்த உலகத்தில் சுகம் பெற ஒரே ஒரு வழிதான் உண்டு. அது தேவனிடத்தில் உள்ள விசுவாசம் மட்டுமே. என்னுடைய சொந்த விசுவாசத்தின் மூலம், தேவன் அனுமதித்தாலும், உங்களிடத்திலிருந்து அசுத்த ஆவியைத் துரத்துவதற்கு நீங்கள் தேவனை விசுவாசித்து அவருக்குச் சேவை செய்ய வேண்டும், இல்லையேல் அது திரும்பிவிடும். இயேசு, இதனின்றும் அதிக தீங்குவராதபடி, இனி பாவம் செய்யாதே! போ! என்று சொல்லவில்லையா? உங்களுடைய மீதியான வாழ்நாட்களிலே, தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், ஜெபவரிசைக்கு ஒருபோதும் வரவேண்டாம் அது சரி! எப்போதுமே பாவமுள்ள ஜீவியத்தை ஜீவிக்காதீர்கள், ஏனெனில் மிகவும் மோசமாகிவிடுவீர்கள். தேவன், நீங்கள் முதல் முறை முன்பு இருந்த நிலைமையை விட மிகவும் மோசமாகிவிடுவீர்கள். என்று வாக்களித்துள்ளார். அவ்வாறு வர முயற்சிக்காதீர்கள்... அதுவும் சிறப்பாக இந்த மத்தியான வேளையில், உங்கள் முழு இருதயத்தோடு (கண்டிப்பாக) இனி வரும் நாட்களில் தேவனை சேவிக்க வேண்டும் என்ற வாக்குக் கொடுக்காமல் இந்த அற்புதத்தின் வரிசைக்கு துணிகரமாக வராதீர்கள். 12இப்போது... அது... இயேசு சாத்தானிடம் நீ உன் தேவனை பரீட்சை பாராதே, என்று எழுதியுள்ளதே என்று கூறினார். அல்லது, தேவனுடைய வல்லமையைக் காண்பிக்க என்று எழுத்தாளர்கள், வித்தியாசமாகக் கூறியுள்ளது போல இப்போழுது ஞாபகம் வையுங்கள், வேதாகமத்தில், இயேசுவை அநேக மக்கள் கடந்து சென்றிருக்கலாம் ஆனால் அவருக்கு அவர்கள் மீது ஒரு இரக்கமும் ஏற்படவில்லை . அப்படி அவர் எங்கு நிற்க வழி நடத்தப்பட்டாரோ, அங்கு நின்றார் அது சரியா? எடுத்துக்காட்டாக, ஐந்து மண்டப தலைவாசல்கள் கொண்ட குளத்தின் அருகே இருந்த மனிதன். நோயுற்ற மனிதர்களின் கூட்டம் இங்கும் அங்குமாக இருந்த இடத்தை இயேசு கடந்துபோனார். அங்கே பல வருடங்களாக படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் இருந்தான். அந்த மனிதனை அவர் எழுப்பி, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு, வீட்டிற்குப் போகும்படி சொன்னார். அந்தக் கூட்டத்திலிருந்தவர்களிடத்தில் கூட அவர் ஒருபோதும் பேசவில்லை அது சரியா? அவர் அந்தப் பட்டணத்திற்கு நேராக அந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு மனிதனை தம் கைகளால் எழுப்பி, ஜெபித்து அவனை அனுப்பினார் நிச்சயமாக அவன் மரங்களைப் பார்ப்பதுபோல மனிதர்களைப் பார்க்க ஆரம்பித்தான். அங்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரமாக நின்று அங்கு ஜெபித்துக் கொண்டிருக்கலாம் ஆனால் எப்படியோ, (இயேசு) அவர் ஜெபிக்கும்போது அவரது பார்வை அவனிடத்தில் வந்தது பாருங்கள் எங்கெல்லாம் அவர் வழி நடத்தப்படுகிறாரோ... 13பேதுரு சுகமாக்கினதும், யோவான் கடந்துபோனதுமான அந்த அலங்கார வாசல் என்ற கதவருகே இருந்த அந்த மனிதனைப் பாருங்கள் இயேசு, எருசலேமில் இருந்த போது ஒவ்வொரு மாதந்தோறும் அந்த வாசல் கதவின் வழியாகச் சென்றார். ஏன், அவர் அவனைக் குணப்படுத்தவில்லை? அவன் அங்கு 40 வருடங்களாக படுத்துக்கிடந்தான். கவனிக்கவும் அல்லது அவன் ... பிச்சை எடுக்க அவன் அங்கே வந்த வாசல் கதவு அருகே இருந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன் ஆதனால்தான் அவன் அங்கு அநேக வருடங்களாக படுத்திருந்திருக்கிறான். இப்போது கவனியுங்கள், தேவன் மட்டுமே குணப்படுத்துகிறார் தம்முடைய வல்லமையைக் காண்பிப்பதற்காக அல்ல நீங்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படையிலிருக்கிறீர்கள் என்பதால் அவர் குணமாக்க வில்லை, நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருப்பதால், அவர் குணமாக்கவில்லை, அவர் அப்படிச் செய்யவில்லை ஆனால் அவர் உன்னைக் குணமாக்கும் போது அந்த வேளையிலிருந்து நீ ஒரு கிறிஸ்தவனாயிருக்கவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவர் ஆனால் அவர் நீ சரியாகிவிடுவாய் என்பதால் உன்னைக் குணமாக்கவில்லை, நான் அங்கு போவேன், நான் குணமாக்கப்படுவேன், ஏனெனில் நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால் இல்லை ... தேவன் உன்னுடைய விசுவாசத்தின் பேரில் குணமாக்குகிறார், உன்னுடைய விசுவாசம். நீ ஒரு... நீ ஒரு பாவியாய் இருந்தால், தேவனைப் பற்றி எதுவும் தெரியாதிருந்தால், ஒரு போதும் கிறிஸ்தவனாக இல்லாதிருந்தால், நீ ஒரு கிறிஸ்தவனாக இருப்பாய் என்று அவருக்கு வாக்குக் கொடுப்பாயானால், அப்படி அவரிடத்தில் வந்தால், அதைச் செய்ய உனக்குப் போதுமான அளவு விசுவாசம் இருந்தால், அது உனக்குச் செய்யப்படும். உடனடியாக நடக்கும் ஆனால் ...? (ஒலி நாடாவில் காலியிடம் ஆசி) 14என் மனதில் எந்த வித நோக்கமும் இல்லை. நீங்கள் அங்கு போங்கள் அது உங்களுக்கு ஒருவித அதிர்ச்சியைத் தரும் கிழே தெருவிலே தங்கள் கரங்களில் குழந்தைகளை பிடித்துக் கொண்டு நடக்கும் தாய்மார்களைப் பாருங்கள் முடமாகிப்படுத்துக் கொண்டிருப்போரைப் பாருங்கள் நின்று ஜெபிக்கும்படி மிகவும் அவசரத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். நான் ஒரு மனிதன் எனக்கு இதயம் இருக்கிறது மக்களுக்காக நான் வருத்தப்படுகிறேன் நான் கடந்து செல்வேனானால் ஒரு வாரம் முடிவதற்குள் இதயம் வெடிப்பது போல உணர்வேன். நான் என் கண்களை மூடி மேலே நோக்கி, ஓ, தேவனே இரக்கமாயிரும் என்று சொல்லிக்கொண்டு நடக்கிறேன் நான் நரம்புத் தளர்ச்சி அடையத்தக்கதான அந்த இடத்திற்குச் சென்று விடுகின்றன். சில நொடிகளுக்குச் முன்பு, எனது பயணத்தின் போது எல்லாம் சரியாக இருந்ததா? என்று கேட்க, எனது 19 மாதக் குழந்தையை அம்மா கூப்பிட்டாள். இப்பொழுது தான் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் என் அப்பா? என்று கூறி, நான் உம்மை நேசிக்கிறேன் வீட்டிற்கு வாருங்கள், அப்பா, என்று பேசினாள் அப்படியாக அவளைத் தொலைபேசியிலிருந்து விடுவித்தபோது கத்த ஆரம்பித்துவிட்டாள். மீண்டும் தொலைபேசியில் வந்தாள் அது என்னை கிட்டத்தட்டக் கொன்றுபோட்டது நிச்சயமாக... அது நடந்தது... அவள் பிறந்ததிலிருந்து இதுவரை ஐந்து முறை மட்டுமே அவளை பார்த்திருக்கிறேன் (ஒலி நாடாவில் காலியிடம்). 15ஏன், பெரும்பாலான தகப்பன்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளுடன் இருக்கிறார்கள் அது என்னைப் பாதிக்கிறது ஓ ... நான், நோவுற்றுள்ளதும், பாதிக்கப்பட்டுள்ளதுமான ஏழைகளைப் பார்க்கிறேன் நான் செய்ய கூடிய ஒரே ஒரு காரியம் என்னவெனில், அம்மக்களோடு நேர்மையாக இருப்பதே அது இதுவே: இவ்வரிசையில் நீ வரும்போது... இன்றைக்குப்பிறகு ஜெபவரிசையில் வரும்போது தேவனோடு இருப்பதற்கு ஒரு உடன்படிக்கையை செய்வாயா? இன்றைக்கு இந்த அற்புதங்களை தேவன் நடத்துவாரானால், மேடைக்கு எதெல்லாம் கொண்டுவரப்படுமோ, அவற்றை எல்லாம் தேவன் குணமாக்கினால்... தேவன் அதை அறிவார் அருடைய வல்லமையை ஒரு காட்சியாக கொண்டுவர நான் முயற்சிக்கவில்லை இல்லை நான் அவ்வாறு செய்யவில்லை ஆனால் நீங்கள் அதனால் உற்சாகமடையலாம். நான் எப்போதுமே ஃபோனிக்ஸ், அரிசோனா இவைகளை நேசிக்கிறேன் இன்னும் நான் உங்களை நேசிக்கிறேன் ஃபோனிக்ஸில் கூட்டங்கள் சரியாக இருந்த தில்லை ஏன் என்று எனக்கு தெரியவில்லை மற்ற இடங்களில் இருப்பது போல இங்கு அதிக மக்கள் கூட்டம் ஒருபோதும் இருப்பதில்லை இப்பொழுது ஏன் எனக்குத் தெரியவில்லை ஆனால் நான் எப்பொழுதுமே ஃபோனிக்ஸை நேசிக்கிறதுண்டு, மேலும் நான் ஆச்சரியப்படுகிறேன் இங்கு சில நாட்கள் இங்கு தங்க விரும்புகிறேன் இங்குள்ள ஏதோ பெரிதான ஒன்று என்னை இங்கு இழுக்கிறது சில தருணங்களில் அவ்வாறு என்னை வழி நடத்துவது போல இருக்கிறது. 16நான் அற்புதங்களுக்காக இன்றைய தினத்தை வைத்துள்ளேன் இப்போது என்னை, என்னுடைய ஜெபத்தை கேட்கக்கூடிய தேவன், இன்று இதை எனக்கு அங்கீகரித்தால் இங்கு எது கொண்டுவரப்படுமோ அது எனக்கும் தேவனுக்கும் முன்பதாக, தேவன் அதை சரியாகும்படி இருக்கும் செய்வாரானால், நிச்சயமாக, நீங்கள் இப்போதிலிருந்தே நம்புவீர்கள், நீங்கள் ஜெபவரிசையிலிருந்து கடந்து செல்லும்போது தேவன் உண்மையாகவே சுகமளிக்கும் வரத்தை அனுப்பியுள்ளார் என்று நம்புவீர்கள், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? உங்களுக்காக ஜெபிக்கப்பட்டது என்று நீங்கள் விசுவாசித்தால் நடக்க கூடிய மற்ற கூட்டங்களில், இன்னும் ஒரு அற்புதம் நிகழ்த்தப்பட வேண்டியதில்லை. நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள், எனக்கு முன் உள்ள வேதாக மத்துடன், இங்கே, இந்த வல்லமை சுகமளிக்க மட்டுமே கொடுக்கப்பட்ட டுள்ளது என்பது உண்மை. நான் மக்களுக்காக ஜெபிக்கிறேன், அவர்கள் கடந்து செல்கிறார்கள். மேலும் அவர்கள் விசுவாசித்தால், அவர்கள் சுகமடைகிறார்கள். அந்த உணர்வு அந்த விசுவாசம், அந்த ஜெபம் அந்த நபருக்காகச் சொல்லப்பட்டது என்றால் அதை அவர்கள் விசுவாசித்தால், தேவனுடைய தூதர்கள் அந்த நபரைக் காவல் புரிவர். அவர்கள் சுகமடைந்தே தீருவார்கள் அவர்கள் அந்த மணிநேரத்தில் அல்ல, அந்த வாரத்தில் அல்ல, அந்த மாதத்தில் அல்ல ஆறுமாதங்களுக்குப் பிறகு கூட குணமடையலாம் ஆனால் குணமடைவார்கள், குணமடைந்தே தீர வேண்டும். 17நண்பர்களே எனது கூட்டத்தில் கேள்விப்பட்ட மிகுந்த குறைந்தபட்ச ஜெப அட்டையின் எண்ணிக்கையில் 70 சதவிதம் ஜெபிப்பதற்கென்று இருந்தது அதிகபட்ச சதவீதம், கனடாவில் உள்ள வின்னிபெக்கில் ஜெபித்ததில் 98 சதவீதம் சுகமளித்தல் நடைபெற்றது சுகமடைந்தனர் 98 சதவீதம். ஐந்து மாதங்களுக்கு முன்பு, அல்ல நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்தது அவர்கள் சுகமடைந்தனர். அவர்களில் சிலர் தாங்கள் நன்றாக இருப்பதாக சாட்சியங்களை அனுப்பியுள்ளனர் நான் போர்ட்லேண்ட் அல்லது ஆஷ்லேண்ட் இல் வேன்கோவர் கூட்டத்தில் இருந்தபோது எனது செயலாளர் கூப்பிட்டு, சகோ.பிரன்ஹாமே, நாம் கொடுத்த ஜெப அட்டைகளில், சாட்சிகள் 100 சதவீதத்தை அடைந்துவிடும் என்று நம்புகிறேன், 100 சதவீதத்தை, அது அப்படியே ஆகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். 18நல்லது கனடாவிலுள்ள அந்த மக்களின் விசுவாசத்தின் பேரில் அவர்களை தேவன் குணமாக்கக் கூடுமானால், கனடா நாட்டு மக்களை நேசிப்பது போல, தேவன் அவ்விதமாகவே அமெரிக்கா மக்களையும் நேசிக்கிறார். அது சரியா? அவர் பட்சபாதமுள்ளவரல்ல நீங்கள் விசுவாசித்தால் மட்டும் போதும், அவர் உங்களை சுகமாக்குவார் உங்களிடத்தில் விசுவாசமில்லையானால் உங்களைக் குணப்படுத் தமாட்டார் அவர் சுகமாக் குவார் என்று நீங்கள் விசுவாசித்தே ஆக வேண்டும் இப்பொழுது நான் நினைக்கிறேன் 2, 3 நிமிடங்களில் 3 மணிக்குப் பிறகு இங்கு 5 மணிக்கெல்லாம் முடிக்கவேண்டும். நமது பாடத்தின் பேரில் சிறிது நான் பேச வேண்டும் அதன் பிறகு நாம் ஜெப வரிசையை அல்லது விசுவாச வரிசையை ஆரம்பிக்கலாம். 19இப்போது, இதற்கு எல்லோரும் கவனத்தோடு செவிகொடுப்பீர்களா? நெருக்கமாக? நண்பர்களே தயவு கூர்ந்து இந்த மத்தியான வேளையை உங்களுக்கு முன்பு ஒரு காட்சியாகக் கொண்டு வரவில்லை என்பதை என்னை கவனித்துக் கொண்டிருக்கிற தேவன் தாமே நினைவுகூருவாராக. நான் தவறாயிருப் பேனானால், தேவன் என் மீது இரக்கம் வைப்பாராக நானும் எதுவும் தவறாக செய்ய விரும்பவில்லை. ஆனால், அந்த தூதன் மூலம் அவர், நீ உண்மையுள்ளவனாயிருந்து உன்னை ஜனங்கள் விசுவாசிக்கும்படி செய்தால், உன்னுடைய ஜெபத்திற்கு முன்பதாக ஒன்றும் நிற்கமுடியாது என்று சொன்னார். அது என்னவாயிருந்த போதிலும் நான் ஒரு விஷயத்தை இன்னும் காணவில்லை, அம்மனிதரோடு இப்போது, போதிய நேரம் எடுத்துக்கொண்டு அதோடு கூட தங்கியிருந்து எனக்கு முன்பாக இருந்த மக்களை சர்வ வல்லமையுள்ள தேவன் குணமாக்கினார் நீங்கள் எல்லோரும் புரிந்து கொண்டீர்களா? அதுவே சத்தியமாயுள்ளது. 20இதை மீண்டும் ஒரு முறை ஃபோனிக்ஸில் முடித்து விடுவதற்கு நான் முயற்சி செய்கிறேன். அது சரி. இந்த சில நாட்கள் நான் தங்க விரும்பிய இடம். இந்நாளில் தேவன் மக்களைக் குணமாக்குவார் அதை அவர் எனக்கு அங்கீகரித்தால், இங்கு வரும் யாவரும், செவிடு, ஊமை, நொண்டி, குருடு, புத்திசுவாதீனம் இல்லாதவர், எதுவாக இருந்தாலும் இங்கேயே, இந்த மக்களின் கண்களுக்கு முன்பதாக விடுதலையடைவார்களாக என் ஜெபத்தைக் கேட்டு அதற்கு பதில் அளிப்பாராக தேவன் எனக்கு உதவி செய்யும்படி எனக்காக ஜெபிப்பீர்களா? இந்த வேலை இன்னும் இளம்பிராயமாக இருப்பதாக உணர்கிறேன். அது ஒரு பெரிய பிரயாசை நண்பர்களே, நான் செய்யும் முயற்சிகளுக்குரிய கனிகளை எப்பொழுதும் என்னால் காணமுடிகிறது, நான் எப்போழுதும் அவருக்கு உண்மையாய் இருக்கிறேன். (ஒலிநாடாவில் காலியிடம்) இப்போது என்ன கடந்துவருகிறதோ அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 21பெரிய எழுப்புதல்கள் தேசத்தைக் கடந்து வருவதற்கு ஏதுவாக உள்ளது மக்கள் ஒரே இருதயத்துடனும் ஒரே மனதோடும் இருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவரும் மற்ற ஒருவருடைய சபைக்கு அனுப்புகிறார்கள் அவர்களுக்கு எந்த சபைக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கே எல்லாம் அவர்கள் செல்லட்டும். தங்களுக்கென முன்னுரிமை எடுத்துக் கொள்ளட்டும் மேலும் ஒரு நபர் எதை விசுவாசிக்கிறாரோ தொடர்ந்து முன்னேறி அதை விசுவாசிக்கட்டும், ஆனால் பிற நபர்களை குறை சொல்லக் கூடாது அதுதான்... அதுதான் நாம் ஒன்றாகக் கூடியிருந்து தேவனுக்கு ஊழியம் செய்வோம். ஓ, அந்த தேவன் இன்னும் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். இந்த மதிய வேளையில் எனக்கு அவர் உபகாரம் செய்து, உங்களுக்கு முன்பு இந்த மக்களைக் குணப்படுத்துவரானால், பிறகு என்னுடைய வார்த்தையை நம்புங்கள் நண்பர்களே, எந்த நபருக்கு எதிராகவும், அல்லது எந்த சபைக்கு எதிராகவும் எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள் நாம் ஒரு சகோதர சகோதரிகளைப்போல ஒன்றாகக் கூட்டிச் செல்வோம். அப்போது வெளியே இருக்கும் பாவி, நாம் உண்மையாகவே இயேசுவை நேசிக்கிறோம் என்று அறிந்து கொள்வான் அது சரியே! பாருங்கள். 22இயேசு இதினால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லா மனிதரும் அறிந்து கொள்வார்கள் என்று சொன்னார். ஏனெனில், நீங்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளுகிறீர்களா? நீங்கள் இந்த சபையைச் சேர்ந்தவர்கள் என்பதினாலா? நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்கிறீர்கள் அது சரியா? ஒருவருக்கு மற்றவர் மீது உள்ள அன்பு, பிறகு உங்களுக்குத் தெரியும்... நீங்கள் என் சீஷர்கள் என்று எல்லா மனிதரும் அறிந்துகொள்வார்கள். நமக்கு ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இல்லையென்றால், பிறகு நாம் அவருடைய சீஷர்களாய் இருக்க முடியாது அதுதான் பாவிகளைப் பின்னடைய வைக்கிறது அதுதான்... வருகையைப் பிடித்துக் கொண்டிருக்கிறது... (ஒலிநாடாவில் காலியிடம்) இந்த மத்தியானத்தில் தேவன் என்னை அனுமதிப்பார் என்று நம்புங்கள் இந்த அழகான சிறிய பட்டணத்திற்காக, தன்னுடைய சக்தியையும் அதிகாரத் தையும் நிரூபிப்பதற்காக அவர் அப்படிச் செய்து நீங்கள் அவரைப் பெற்றுக் கொள்ளவில்லையானால், எனது வார்த்தையை கேளுங்கள், என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டேன். அது சரி... இதற்காக கூட்டத்தின் கடைசிவரைக்கும் காத்திருக்கும்படி நினைத்தேன். ஆனால் நான் இப்போது பார்க்கிறேன், இதை நான் செய்தால், இங்கு கூடி வரும் மக்களின் பேரில் பேசுவதற்கு எனக்கு அதிக நேரம் கிடைக்கும். நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே, நீங்கள் கருப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களையுடையவர்களாயினும், அமெரிக்க, கனடா, ரஷ்ய, ஸ்பெயின், மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்களாயினும், எங்கிருந்து வந்திருந்தாலும் நாம் ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவுக்குள் அனைவரும் ஒன்றாயிருக்கிறோம். தேவன் ஒருவரை நேசிப்பதைவிடவும் அதிகமாக மற்ற ஒருவரை நேசிப்பது கிடையாது, உங்களை நேசிப்பதற்கு மேலாக என்னை அவர் நேசிப்பதில்லை. என்னை நேசிப்பதற்கு மேலாக உங்களை ஒருபோதும் நேசிப்பதில்லை எனவே நாம் அங்குள்ளோம். நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்குள் ஒன்றாக ஒன்று கூடியிருக்கிறோம். 23நாம் அந்த விதமாக ஜீவிப்போம் உலகத்திற்கு முன்பாக, ஒவ்வொரு நாளும் நாம் அப்படியே வாழ்வோம் அதை அவர்கள் காண்பார்கள் அவ்விதமாகவே உலகத்தில் இயேசுவை நீங்கள் உயர்த்த வேண்டும் மற்றவர்கள் உங்களில் இயேசுவைக் காணட்டும் எல்லா மனுஷரிலும் வாசிக்கப்படுகிற நிரூபங்களாய் நீங்கள் இருக்கிறீர்கள் நீங்கள் அதை எனக்கு அளிப்பீர்களா? தேவன் மற்றதை எனக்குத் தருவாரானால் நான் இன்றைய தினத்தின் ஆரம்பமாக அது இருக்கும் என்று நம்புகிறேன் ஃபோனிக்ஸ் மூலம் பழைய நாகரீகத்தின் ஒரு எழுப்புதல் ஃபோனிக்ஸில் உள்ள ஒவ்வொரு சபையிலும் ஒரு மகத்தான பெரிய எழுப்புதலைப் பார்க்க நீங்கள் விரும்பவில்லையா? இராஜ்ஜியத்திற்குள்ளாக ஆத்துமாக்கள் பிறந்திருக்கின்றன.... 24ஒரு கணம் நாம் நமது தலைகளைத் தாழ்த்துவோமாக எங்கள் பரலோகப்பிதாவே! இன்று, இக்கூட்டமக்கள் முன்பதாக, சோர்வுடனும், களைப்புடனும் எனது முழங்கால் வலிக்க, புண்பட்டுக் கொண்டும் தள்ளுதல், மற்றும் இழுத்துக் கொண்டும் நின்றிருக்கிறேன் ஓ கிறிஸ்துவே, சிலநாட்களில் உமது அடியான் சமாதானத்துடன் செல்லட்டும். நாங்கள் ஆற்றைக் கடந்து செல்வோம், நீர் எனக்கு மறுகரையிலே இளைப்பாறு தலைக் கொடுப்பீர் என்று விசுவாசிக்கிறேன். பிதாவே, இன்று நான் எப்படி உணருகிறேன் என்பதை நீர் அறிவீர், மனைவி மற்றும் குடும்பத்துடன் சேர்ந்துகொண்டு வீட்டில் நன்றி கூறிக்கொண்டு இருக்க எவ்வளவாய் விரும்புகிறேன், ஆனால் ஓ தேவனே, அந்த அழுகை, அந்த உற்சாகம் போர்ட்லேண்லிருந்து அன்பான ஓரிகானுக்கு மேலாக இழுக்கிறது. இந்த அருமையான ஜனங்கள் ஃபோனிக்ஸிலிருந்து வித்தியாசமான தேசங்களிலிருந்து வித்தியாசப்பட்ட ஜனங்களாய் சேர்ந்து சுகமாவதற்காக வந்திருக்கிறார்கள். 25இப்போதும் பிதாவே, சிலநாட்களிலே நீர் இராஜாதிராஜாவாய் கர்த்தாதி கர்த்தராய் முடிசூட்டப்படும்போது நாங்கள் சேர்ந்து வந்து உமக்கு துதி செலுத்துதலைக் கொண்டிருப்போமாக. அந்த மகத்தான துதியை செலுத்தும் நாளில், எல்லா பரிசுத்தவான்களும் வரிசையாக ஒன்று கூடி இருக்கும்போது, இந்த பூமியிலிருக்கும்போதே, தேவனே நாங்கள் அந்த நாளுக்காக வேலை செய்ய எங்களுக்கு உதவி செய்வீராக. நீர் எங்களுக்கு தெய்வீக பெலனைத் தருவீராக. மேலும் பிதாவே இப்போது நாங்கள் வார்த்தையைத் திறக்கும் இந்த சில க்ஷணங்களிலே, பரிசுத்த ஆவியானவர் தாமே கீழே இறங்கி வந்து, தேவனுடைய காரியங்களை எடுத்து அவைகளை இந்த அருமையான ஜனக்கூட்டத்தினூடே கொண்டு வந்து, அன்பின், ஐக்கியத்தின் வித்துக் களை இந்த சபையின் ஜனங்களின் மத்தியில் விதைத்தருளும். கர்த்தாவே, ஜனங்கள் தாமே ஒரு எழுப்புதலை அவர்களுக்குள்ளாகவே ஆரம்பித்து, அநேக இழக்கப்பட்ட ஆத்துமாக்களை இந்த அடுத்த மூன்று கூட்டங்களிலே கொண்டு வரும்படியாக எங்களுக்கு அருளும். நாங்கள் அதற்காக துதியை செலுத்துகிறோம். இதை அவருடைய நாமத்தினாலே நாங்கள் கேட்கிறோம், ஆமென். 26இப்போது, கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த மூன்று ஆராதனை களிலே, நாம் பலிபீட அழைப்பைக் கொண்டு, சில பாவிகளாகிய ஜனங் களைக் கொண்டிருக்கப் போகிறோம். ஆகவே உங்களுடைய பாவியான நண்பர்களைக் கொண்டு வாருங்கள். தேவன் இங்கே நம்மிடத்திலே நம்மை சந்திப்பார் என எதிர்பார்க்குதலோடு இருங்கள். இரட்சிக்கவும், ஜனங்களை அவர்களுடைய எல்லா வியாதிகளிலிருந்தும் குணமாகத்தக்கதாகவும் கொண்டு வாருங்கள். கடந்த ஞாயிறன்று, வேதப்பாடத்தில், எண்ணாகமம் 21 ஆம் அதிகாரத்தில் வெண்கல சர்ப்பத்தைப் பற்றி பேசியதாக நம்புகிறேன் அதற்கு முன்பு ஒரு... ஞாயிறு அன்று கன்மலையை அடித்தவைப் பார்த்தோம். கடந்த ஞாயிறு, தமது மக்களை எகிப்திலிருந்து கொண்டு வந்ததைப் பற்றியும், அவர்களது வழிகளில் அவர்களுக்கென்று ஒரு வழியை உண்டு பண்ணினார் என்பது பற்றியும் அறியும்படி நம்மை நடத்தினார். 27இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் சபையைப் போன்று எல்லா சபைகளும் மாதிரியாகவும், நிழலாகவும் இருந்தன என கடந்த ஞாயிறன்று 'நாம் பார்த்தோம் வெளியே கொண்டு வந்தது, இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு வரவழைத்தது தேவனின் அற்புதங்களாலும் அடையாளங்களினாலும் நடத்தப்பட்டது, எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு போனது. இவைகள் இன்று இது மிகவும் பரிபூரணமடைந்த மாதிரியான சபையாக இருளிலிருந்து கிறிஸ்துவாகிய வெளிச்சத்திற்குள் நடத்தப்பட்டதுமாக உள்ளது. அவர் எப்படி மக்களைக் கொண்டு வந்தார், அவர்கள் எகிப்தியரின் மத்தியில் எப்படியாக தாழ்த்தப்பட்டிருந்தார்கள் அவர்கள் அஞ்ஞானிகளைப்போலக் காணப்பட்டார்கள். தேவன் அவர்களை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு நியமங்களையும் அதிசயங்களையும் செய்தார். அவர்கள் தேவனோடு நடந்தார்கள் தேவன் அவர்களிடமிருந்து வியாதியை எடுத்துப்போட்டார் அவர்களுக்கு உண்ண ஆகாரம் கொடுத்தார். (ஒலிநாடாவில் காலியிடம் ஆசி) 28பாவம் செய்த ஒவ்வொரு பாவிக்கும் இங்கே ஒரு வழி உண்டு. அது இங்கே உள்ளது. இரத்தத்தால் நிரப்பப்பட்ட ஒரு ஊற்று இங்குண்டு. நரம்புகளிலிருந்து வெளியேறிய ... அந்த இரத்தத்தின் கீழ் பாவிகள் மூழ்கும்போது, தன்னுடைய எல்லாப் பாவக்கறைகளும் நீக்கப்பட்டவனாகி விடுகின்றான். அப்போது நீங்கள் வனாந்திர யாத்திரையிலிருந்து யோவான் 14-ல் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தின் ஊடாக தேவனுடைய சபையைப் பின்பற்றுகிறவருமாய் இருகின்றீர்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உகளுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்து கொள்வேன். அவரது அன்பையும் இரக்கத்தையும் நினைக்கும் போது அது அதிசயமாயிருக்கிறதல்லவா? நான் வருகிறேன் என்னிடத்தில் உன்னைச் சேர்த்துக் கொள்வேன் அத்தகைய அன்பை அவர் கொண்டிருந்தார். 29சில சமயங்களில், நான் ஒரு ஓடிப்போகிற அடிமையைப் போல் உணருகிறேன். பவுல் அவனைக் கண்டபோது, அவன் தனது எஜமானிடத்திற்குத் திரும்பியபோது அவன் சொல்கிறான், வேண்டாம் அவன் உனக்குத் தரக்கூடிய எல்லாவற்றையும் விட்டு விடு, அதை என் கணக்கில் வரவு வை அதை நான் திரும்பி வரும்போது உனக்குச் செலுத்துகிறேன் அதை நான் நினைக்கும் போது, பவுலை உயர்ந்த ஒரு கிறிஸ்தவனாக அங்கு நினைவு கூருகிறேன், எப்படி அவன் உள்ளத்திற்குத் தெரியும் தான் செலுத்த வேண்டிய கிரயம் மிகப் பெரியதென்று கிறிஸ்து தம் சொந்த இரத்தத்தினால் சிலுவையிலே அவனுடைய மன்னிப்பை எழுதி, அவனது ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். அவனுக்கு மற்றவர்களுக்காக எப்படி இரக்கப்படுவது என்பது தெரிந்திருந்தது இந்த பிற்பகலிலே அத்தகைய உணர்வைக் கொண்டிருப்பது ஆச்சரியமல்லவா? பிறரது குற்றங்களை எடுத்து என் மேல் போட்டுக்கொள்வது... நான்... நாம் அப்படி ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்போமானால்..... இப்போது, தேவன் அவ்விதமாகவே விரும்புகிறார். (ஒலிநாடாவில் காலியிடம்) 30அவர்கள் அவ்விடத்திற்கு வனாந்திரத்தில் வந்தபோது தேவனுக்கு எதிராகவும், மோசேக்கெதிராகவும் முறுமுறுத்தார்கள் தேவன் மோசேயைக் கொண்டு பாறையை அடிக்க செய்தார் அவர் எதனால் அடித்தாரோ அதை நியாயத்தீர்ப்பின் கோலாக நாம் எடுத்துக்கொண்டோம். அது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோலாக நாம் உணருகிறோம் அந்த ஒன்றுதான் வண்டுகளையும், பேன்களையும் கொண்டுவந்தது. தண்ணீரை ... ஆகச் செய்தது... அல்லது தவளைகளை தண்ணீரிலிருந்து வரச் செய்தது எகிப்திலே அப்படி நடந்தது ஏனெனில் அது தேவனை நம்பாத அவிசுவாசியான மக்களின் மீது வந்த நியாயத்தீர்ப்பாகும். கவனியுங்கள் தேவன் தமது பிள்ளைகளை நடத்துவதற்கான ஓரே ஒரு பரிகாரம்தான் இன்றும் நம்மை நடத்துவதற்கான ஓரே வழி பரிகாரம் மூலம்தான். அந்தப் பரிகாரம் கல்வாரியில் ஏற்கனவே செய்து முடிக்கப் பட்டாயிற்று. 31கவனிக்கவும் அவர்கள் அப்படிச்சென்ற காரியம் வேதாகமத்தோடு எப்படி பூரணப்படுகிறது. எப்படி இளைய மகனான யோசேப்பு, தனது சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டானோ, கிறிஸ்துவும் தமது சகோதரர் களால் புறக்கணிக்கப்பட்டார் யோசேப்பு ஏழு வர்ண அங்கி ஒன்றை அணிந்திருந்தான் அந்த ஏழு நிறங்களும் நிச்சயமாக வானவில்லின் ஏழு நிறங்களைக் குறிக்கிறது. அந்த வானவில் ஒரு உடன்படிக்கை ஆகும். மேலும் தேவன் எப்பொழுதும் தமது உடன்படிக் கையின் ஜனங்களைக் கொண்டவராயிருக்கிறார் இந்த இளையமகன் யோசேப்பு தமது சகோதரர்களால் கொல்லப் படும்படியாயிருந்தான். அவனுடைய மேலங்கி அவனது தந்தையிடம் திரும்பக் கொடுக்கப்பட்டது. நான் ஒரு காரியத்தை நீங்கள் காணவிரும்புகிறேன். அவன் கொல்லப் படும் படியாக ஒரு குழியிலே தூக்கி வீசப்பட்டான் ஆனால் அக்குழியிலிருந்து அவன் மேலே எடுக்கப்பட்டான், உலகத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பட்டிணத்திற்குக் கொண்டுவரப்பட்டான் முக்கியமான ஒரு மனிதனாக ஆனான். அந்த அரண்மனை வளாகத்திற்குள்ளேயும், அல்லது அதன் நுழைவாயிலின் வழியாக வருவதற்கும் யோசேப்பின் முதல் வருகை மூலமாய் அல்லாமல் எந்த மனிதனும் உட்பிரவேசிக்கமுடியாது. அவன் கிறிஸ்துவின் ஒரு பூரண மாயிருந்தான். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டோம் என்று எண்ணினர் கல்லறையில் அவரை எறிந்துவிட்டனர் ஆனால் தேவன் அவரை எழுப்பினார் ஆனால் இன்று அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் அவருடைய மகிமையில் இருக்கிறார். கிறிஸ்து மூலமாய்த் தவிர, எந்த ஒரு மனிதனும் தேவனிடத்தில் வரமுடியாது. அது சரியா? 32கவனியுங்கள் கசாப்புக்காரன் மற்றும் ரொட்டி சுடுபவனில் ஒருவன் மறுக்கப்பட்டான் மற்றவன் புறக்கணிக்கப்பட்டான். சிலுவையின் அந்த இரண்டு கள்வர்களைப் போல. ஒரு பூரணமாதிரி, யோசேப்பின் மரணத்திலே அவன் எகிப்தியருக்கு அடையாளம் வைத்துவிட்டுப் போனான். அவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றபோது, அவனது எலும்புகள் எடுக்கப்பட்டன. அவர்களைக் கடந்துபோன எகிப்தியரில் பலர், அல்லது இஸ்ரவேலர், அந்த எலும்புகளைப் பார்க்கிறார்கள். எலும்புகள் முழுவதுமாய் சிதைந்து போகும் முன்பு சில தினங்களுக்கு முன்னரே அவைகளோடு கூடச் செல்லவேண்டும் என்பதை அறிந்திருந்தனர் கிறிஸ்துவினுடைய, எலும்புகளை நான் விசுவாசிக்கவில்லை, ஆனால் அவர் அவர் காலியான கல்லறையை விட்டுவிட்டுப் போனார், அதனால்தான் நாம் இன்று கிறிஸ்தவர்களாயிருக்கிறோம். நாம் யாரோ ஒருவர், சகோ, பிரன்ஹாமே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எபிரேய எழுத்தின்படி ஒரு கிறிஸ்தவர் என்றார். நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு, இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அதிகம் எனக் கூறினேன். நிச்சயமாக, நீங்களும் மறுபடியும் பிறந்திருந்தால் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். கவனிக்கவும் ஆனால் ஒரு காலியான கல்லறை நமக்கு உள்ளது. 33இன்று, உலகத்தில் ஒரு பெரிய மதம் முகமதிய மதமாக உள்ளது. முகமதியர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் உள்ளனர் முகமதின் கல்லறையருகே ஒரு வெள்ளைக் குதிரையை வைத்துள்ளனர், அக்கல் லறை அங்கே இரண்டாயிரம் வருடங்களாக உள்ளது ஒரு வெள்ளைக் குதிரை, முகமது உயிர்த்தெழுந்து பிறகு அதில் சவாரி செய்ய தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகிறது. நாம் கங்கை ஆற்றினருகே சென்றோமானால் தாய்மார்கள் தங்கள் சிறிய குழந்தைகளை பலி கொடுப்பதைப் பார்க்கலாம் அவர்கள் முதலைகளிடம் குழந்தைகளை வீசி எறிவர் அவைகள் அவற்றைக் கடித்து, நொறுக்கித் தின்னும் அவைகள் வாயிலிருந்து இரத்தம் பீச்சியடித்துக் கொண்டு வெளிவரும் அதை நைல் நதி கடவுளுக்குப்பலியிடுவர். இப்போது, யாரோ ஒருவர் சொன்னார்கள், நான் நேர்மையாக உள்ளேன் அதுதான் வித்தியாசத்தை உண்டாக்குகிறது என்று அது நேர்மையைவிட அதிகம் எடுத்துக் கொள்கிறது, அவர்கள் நேர்மையான வர்கள் கூட 34இன்று இந்தியாவில் புத்தரின் வழிபாட்டின் கீழ் உள்ள சகோ. ஜடோப், காடிஸ் மோசெர்வன், சகோ. பிரன்ஹாமே நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் அனைவரும் காடிஸ்ஸை அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் அவர் மெத்தோடிஸ்ட் சபையைச் சார்ந்தவர் சர்வதேசத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர் எனக் கூறினார். அவர்கள் நின்று கொண்டேயிருப்பதை நான் பார்த்திருக்கிறேன் அவர்களது விரல் நகங்கள் கைகளுக்குள் பரவி நீண்டு வளர்ந்திருக்கும், ஓ பெரிய புத்தரே என்னுடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறு தல் கொடுத்தீரானால், நான் ஒரு போதும் என் கைகளை கீழே விடமாட்டேன், என்பேன் என்றார் அப்படியே விட்டுவிடுங்கள் அவர்களில் அநேகர் வருடக்கணக்கில் கீழே படுப்பதேயில்லை அவர்கள் தலைகீழாக, சுவரில் நின்றுகொண்டு ஜெபிப்பர், சீனர்கள் தங்கள் பாதங்களை வெட்டிக்கொள்வர். அவர்கள் நானூறுக்கும் அதிகமான சமையலறை கடவுள்களைக் கொண்டுள்ளனர், அது போல... ஏதோ காரியத்திற்காக நாத்திக வழிபாடு தங்கள் ஆத்துமாக்களுக்கு அமைதிவேண்டி கதறுகின்றது. 35மேலும் அமெரிக்கர்களாகிய நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யலாம், ஏன் நியாயத்தீர்ப்பின் நாளிலே இத்தகைய அஞ்ஞானிகள் எழும்பி ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கலாம் (காலியிடம்) அது சரி (காலியிடம்) உங்கள் விக்கிரகங்களுக்கு (காலியிடம்). அவைகள் எல்லாம் மரணமடைந்து போய்விட்டன. (காலியிடம்) ஆனால், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் அது ஒரு காலியான கல்லறையாக இருக்கிறது நீங்கள், ஓ, நல்லது, அவர்கள் கல்லறையை காலி செய்திருக்கக்கூடும் என்று கூறுகின்றார்கள். அவர் அதை அதற்கும் மேலாகச் செய்தார் அவர், நான் பிதாவிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் அவர் வேறொரு தேற்றரவாளனை அதாவது பரிசுத்த ஆவியை அனுப்புவார் என்றார். அவர் என்றென்றும் உங்களோடு வாசமாயிருப்பார். அவர் இங்கே இந்த நாளில் இக்கட்டிடத்தில் இருக்கிறார். எந்த இருதயத்தையும் இப்பொழுதே நிரப்புவதற்குத் தயாராக உள்ளார், உலகத்தை வெறுமையாக்குவார். கிறிஸ்துதாமே, பரிசுத்த ஆவியின் உருவில் வருவார் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் சமாதானம் பெறுவீர்கள் அது சரியே. 36ஓ, என்னே! அது நம்முடைய இருதயத்தை வியக்கச்செய்வதில் ஆச்சரியமில்லை தேவன் மகத்தான சபையை வெளியே கொண்டு வருகின்றார். பிறகு காதேஷ் என்ற இடம் எங்கேயோ, அந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, அந்த இடம் அவர்கள் நியாயத்தீர்ப்பின் இருக்கையாக இருந்தது கடந்த ஞாயிறன்று அதைக் குறித்துப் பார்த்தோம் பிறகு சபை வந்த பின்னர், மார்டின் லூத்தர்.... யாத்திரையின் மூன்றாவது நிலை இருக்கிறது யாத்திரையின் முதல் நிலையில் மார்டின் லூத்தர் இருளிலிருந்து வெளியே அழைத்தார். ஜான் வெஸ்லி, இரண்டாவது நிலையாகும் பிறகு அங்கு பெந்தேகோஸ்தே வருகிறது அந்த பெந்தே கோஸ்தே நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தது அந்த மக்கள் வரங்களின் பின்னே சென்றார்கள்.... பதிலாக (ஒலிநாடாவில் காலியிடம்) அது சரி தேவனை நான் விசுவாசிக்கிறேன் அவர். அதை நான் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார் நண்பர்களே, உங்கள் இருதயங்களில் நீங்கள் தேவனுடைய அன்பைத் தவற விடுவீர்களானால் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள். நீங்கள் என்னதான் செய்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. எங்கே அன்னியபாஷை இருக்கிறதோ, அது நின்றுவிடலாம் தீர்க்கதரிசனம் எங்குள்ளதோ அது மறைந்து போகலாம். ஆனால் எங்கு அன்பு உள்ளதோ அது என்றைக்கும் நிலைக்கும் என் மனைவிக்கு என் மீதுள்ள பயத்தைவிட அன்பு அதிகமாக இருக்க நான் விரும்புவேன், நீங்கள் அப்படி இல்லையா? நீ நிச்சயமாக தேவனை நேசி, உங்கள் இருதயத்திலுள்ள தேவனின் அன்பு... 37இப்பொழுது கவனிக்கவும் அவர்கள் நியாயத்தீர்ப்பை சந்தித்தபோது அவர்கள் அனைவரும் பின்னடைந்துவிட்டனர். உடனே சுகவீனம் அந்த பாளையத்தினுள் வந்துவிட்டது கொள்ளிவாய் சர்ப்பங்கள் உள்ளே வந்துவிட்டன, தேவன் இஸ்ரவேல் புத்திரருக்காக சுகமாக்கும் வரத்தை, ஒரு வெண்கல சர்ப்பத்தை அனுப்பினார் ஒரு சமயம் தாம் அதைச் செய்ய விசுவாசிக்கக்கூடிய ஒரு மனிதனை அவர் கண்டுபிடிக்க முயன்று இருந்திருக்கலாம், அதனால் அதை ஒரு துண்டு பித்தளையும் கம்புமான சர்ப்பத்தின் மீது வைத்தார். அதே விஷயம், வேறொரு வடிவில், நூற்றுக்கணக்கான சபைகளிலும், நிறுவனங்களிலும், ஸ்தாபனங்களிலும் ஒருவருக்கொருவர் வேண்டாத தடபுடல் செய்து கொண்டிருக்கின்றனர் அது வியாதி இதுவரை இராத அதிக வியாதிகள் இப்பூமியில் இன்று இருக்கின்றன. புற்றுநோயான கொள்ளை நோய் தேசத்தையே அழிக்கின்றது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதனால் இறந்துபோகிறார்கள் அந்த மணிவேளையின் போது தேவனுடைய தூதன் கீழே வந்து புற்றுநோயை சுகமாக்கினார். 38சிறிது நேரத்திற்குப் பின்பு இறக்கும் தருவாயிலுள்ள ஒரு குழந்தைக்காக மருத்துவமனைக்குச் செல்லுகிற வேளையில், பதினான்கு மருத்துவர்கள் புற்றுநோயுடைய அவளைக் கைவிட்டுவிட்டனர் என்று கூறுகிறார்கள். ஓ! தேவனே, என்னை அங்கு சந்தியும் ஃபோனிக்ஸுக்கு சாட்சியாக இருக்கும் அந்தத் தூதன் அங்கு நின்றுகொண்டிருந்து புற்றுநோயைப்போல் இல்லை என்று உறுதிப்படுத்தினார் அவர், உனது ஜெபத்திற்கு முன்னால் ஒன்றும் நிற்காது, புற்றுநோய்கூட என்று சொன்னார். ஆனால் எல்லா எபிரேயரும் அந்த வெண்கல சர்ப்பத்தை விசுவாசித்தார்கள் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. இன்று ஆயிரக்கணக்கான புறஜாதியினர் மற்றும் மக்களிடம் தெய்வீக சுகமளிக்கும் வரத்தைப் பற்றி நீங்கள் பேசினால் அது ஒரு மூடநம்பிக்கை என்று பேசுவர். அப்படியானால் நீங்கள் எப்படி சுகமாக முடியும் என்று எதிர்பார்க்கலாம்? முதலாவது அது உங்களுக்கு இல்லை, அது விசுவாசிகளுக்குத்தான், விசுவாசிக்க கூடியவர்களுக்கு மட்டும்தான். 39இப்போது கடந்த ஞாயிறு அன்று வீட்டிலிருந்து தொடர்ச்சியாக 22 ஆம் அதிகாரத்திற்குள்ளாக யாத்திரை செய்யப் போகிறோம். அதை வாசிக்க எனக்கு நேரமிருக்காது நான் ஒன்று அல்லது இரண்டு வசனங்களை வாசிக்கிறேன் உன்னிப்பாக கவனிக்கவும் இஸ்ரவேல் புத்திரர் முன்னேறிப்போய், எரிகோவின், யோர்தானின் கரையோரமாக மோவாபின் சமவெளியிலே பாளையமிறங்கினார்கள். கவனிக்கவும் அவர்கள் யாத்திரை செய்தார்கள். அவ்வாறு செல்லும்போது..... ஆரோன் அந்த வேளையின்போது மரித்துவிட்டான் மோசேயுடன் இஸ்ரவேல் புத்திரர் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் அந்த தேசத்தை சூழ்ந்து கொண்டார்கள் ஆனால் அந்த ராஜா, இல்லை, நீங்கள் இங்கிருந்து இப்படிப் போகக் கூடாது என்று கூறிவிட்டான். ஆனால் அவன் அவர்களுக்கெதிராய் வந்து சண்டையிட்டு மக்களை எடுக்கும் போது, தேவன் அவனிடம், இஸ்ரவேலுக்குச் சொன்னார், அல்லது இஸ்ரவேல் தேவனிடம் வாக்குரைத்து, சொன்னது அந்த அரசனிடமிருந்து அவர் விடுதலையாக்கினால் அவன் முழுவதுமாக அந்த தேசத்தையே அழித்திருப்பான். இன்று அது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது தேவன் உனக்கு ஆவியை, பரிசுத்த ஆவியைக் கொடுப்பாரானால், உங்கள் ஜீவியத்திலிருந்து பாவத்தை முற்றிலுமாக அழித்து விடுங்கள், தொடர்ந்து செல். ஒன்றும் சபையை நிறுத்தமுடியாது. உன்னை ஒரு மூடன் என்று அவர்கள் அழைக்கலாம், வேதத்தை மூடிவைக்கச் சொல்லலாம் நீ ஒரு பரிசுத்த உருளை என்று சொல்லலாம், அல்லது எது வேண்டுமானாலும் அவர்கள் சொல்லலாம், தேவனுடைய சபையையில் ஒன்றும் நிற்காது, அவள் கானானை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். நீ செல்லவில்லையானால், தேவன் போக விரும்பும் அவர்களை கூட்டிச் செல்வார். அது போகும், அது சரி அவர், அந்த சபை ஒன்றுமில்லை அது ஒரு தடுக்க இயலாத ஒன்று அது சரி, மேலும் தேவன் எல்லாவற்றையும் அசையச் செய்வார். 40இங்கு சில வருடங்களுக்கு முன்பு, உன்னைத் தூக்கியெறிவதாக அவர்கள் சொன்னார்கள், உன்னை பின்னால் தள்ளி வைக்கப் போவதாகவும், உன் வாயை மூடவும் செய்வதாகச் சொன்னார்கள், ஆனால் சபையானது தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது அது சரி, சபையானது செல்லும், அங்கே ஒன்றுமில்லை, நீங்கள் பெரிதாக பெறப்போகும் நேரம் வந்துவிட்டது நீங்கள் பேசவும், சொல்லவும் கூடும். இப்போது அவள் தொடர்ந்துபோகிறாள் இறுதியாக அவர்கள் மோவாப் தேசத்திற்குக் கடந்து வந்தார்கள் அவர்கள் அரசன் பாலாக் கூட, அவன் பாலாக் அவன் தோற்கடிக்கப்படுவான் என்று எண்ணினான் அவன் ஓ, இந்த பெரிய கூட்டமானது நம்மை எருது வயலிலுள்ள புல்லை மேய்ந்து விடுவதுபோல, மேய்ந்துவிடும் எனக்கூறினான். அவர் ஒரு போதகர் என்று பெயர் கொண்ட ஒரு தீர்க்கதரிசியை அங்கே அனுப்பி கீழே வந்து இந்த இஸ்ரவேல் மக்களை சபி என்றான், பிலேயாம். யாரையெல்லாம் நீ சபிக்கிறாயோ பிலேயாம், அவர்களெல்லாரும் சபிக்கப்பட்டவர்கள், நீ யாரை யெல்லாம் ஆசீர்வதிக்கிறாயோ, அவர்களெல்லாரும் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள் என்று இஸ்ரவேலைக் குறித்து சொன்னதை அறிந்திருந்தான். 41இப்போது நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன். இது இங்கே உள்ளது அந்த தீர்க்கதரிசியிடம் வல்லமை இருந்ததென்று மக்கள் அறிந்திருந்தனர் எதுவரையெனில், அவன் சபிப்பது எதுவானாலும் அது சபிக்கப்பட்டது, அவன் ஆசீர்வதிப்பது எதுவானாலும் அது ஆசீர்வதிப்பட்டது என்பது வரை, வேதாகமம் வாசிக்கும் வேதாகமவாசிகளே, வேதாகமத்தின் படி அது உண்மையா? இப்போது நமக்கு வாசிக்க நேரமிருக்குமாயின், ஆனால்... (ஒலிநாடாவில் காலியிடம் ஆசி) என்னால் முடியாது, தேவன் என் வாயில் போடுகிறார் அது சரியா? இப்போது என்னால் சொல்ல முடியாது சொல்லமுடியாது எந்தத் தீர்க்கதரிசியும் இல்லை, மனிதன் இல்லை, எந்த சுகமாக்குபவரும் இல்லை, ஒருவரும் இல்லை. நீங்கள் தீர்க்கதரிசி பற்றி அதிகம் கேட்கிறீர்கள் நிச்சயமாக அப்படிச் செய்கிறீர்கள். அநேகமக்கள் தங்கள் குஷ்டரோகம் சுகமாக்கப்பட எலிசாவிடம் வந்தார்கள், எலிசாவின் நாட்களில் அநேக குஷ்டரோகிகள் இருந்ததாக வேதம் கூறுகிறது. ஆனால் ஒரே ஒருவன் மாத்திரம் சுகமாக்கப்பட்டான். அவன் நாகமான் அது உண்மையா? நிச்சயமாக. எத்தனைபேர் இன்னும் வந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏறக்குறைய நூற்றுக் கணக்கான குஷ்டரோகிகள் வந்தனர். ஏனெனில் எலிசாவின் நாட்களில் அநேகம் பேர், ஆனால் அவர்களில் ஒரே ஒருவன் மாத்திரம்..... தேவன் வேதத்தில் அதை பதிவு செய்துள்ளார் போய்ப் பாருங்கள். 42இன்று அநேக மாதங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஒரு விஷயம் என்னிடம் உள்ளது, முப்பத்தி ஐந்தாயிரம் சுகவீனப்பதிவுகள் நிச்சயமான சுகமாகுதலைப்பற்றிய, மருத்துவர்களின் கணக்கு விபரம் அது, சகோதரனே, நான் மிகவும் உணச்சிவசப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன், ஆனால் நான் அப்படியில்லை. நான் உணர்ச்சிவசப்பட வில்லை நான் எந்த நிலையிலுள்ளேன் என்பதை நான் அறிவேன், ஆனால் பாருங்கள். இயேசு, நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்திருக்கிற இந்தக் காரியங்களை விட அதிக காரியங்களை நீங்கள் செய்வீர்கள், என்று கூறினார். அந்த வார்த்தையை யாராவது நிறைவேற்றியே தீரவேண்டும். அது சரி. இந்தக் கல்லுகளாலே ஆபிராகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண தேவன் வல்லவராயிருக்கிறார். 43கவனிக்கவும் இப்போது பெரிய சுகமளித்தல்கள் நடக்கின்றன, இதுதான் கடைசி நாட்கள் இத்தகைய விஷயங்களை நான் உணரவில்லையானால், அற்புதத்தின் வரிசையைப் (Miracl Line) பற்றி பேசியிருக்க அஞ்சியிருப்பேன் தேவன், அதை நடத்து என்று சொன்னால் மாத்திரம் அதை என்னால் செய்யமுடியும். பேச்சு என்று தேவன் சொன்னால் மாத்திரம் என்னால் பேசமுடியும், தேவன் சுகமாக்கு என்று சொன்னால் மாத்திரம் என்னால் சுகமாக்கமுடியும், தேவன் அந்த வேகமான அதிர்வுகளை நிறுத்தி விடுவாரானால் அந்த அதிர்வு போய்விட்டது என்று என்னால் கூற முடியும். இப்போது என்னால் அதை நிறுத்த முடியாது நான் ஒரு சுகம் தருபவர் இல்லை, அவரே சுகமளிப்பவர்; ஆனால் அவை நிறுத்தப்படுவதை நான் பார்க்கும்போது அவைகள் என்னால் நிறுத்தப்படுவதில்லை அவைகள் தேவனால் நிறுத்தப்படுகின்றன. அதை நான் சொல்லும்போது நீங்கள் அவிசுவாசித்தால், நீங்கள் மறுபடியும் சுகவீனத்திற்குள்ளாவீர்கள் நீங்கள் விசுவாசித்தால், குணமடைவீர்கள். அதுசரி. சுகமடைவதைத்தவிர வேறு எதுவும் வைத்துக்கொள்ள முடியாது நான் ஒரு செவிடனை கேட்கச் செய்யமுடியாது, நான் ஒரு ஊமையனைப் பேசவைக்க முடியாது மக்களின் காதுகளிலுள்ள அடைப்பை வெளியேறும்படி செய்ய என்னால் இயலாது, அதைத் தேவன் செய்கிறார். அவர் அதை மேடையில் செய்தாரானால், சென்று களிகூர்ந்து அவருக்கு ஊழியம் செய்யுங்கள் இல்லையெனில்... இன்னும் அதிகமான காரியங்கள்... 44பிலேயாம் தேவன் என்னை அனுப்பவில்லையானால் என்னால் செய்ய முடியாது என்றான். நல்லது, அவன் தேவனிடம் ஜெபித்தான். ஆனால் அந்த இரவு, ஆவியானாவர் வந்து அவனிடம் பேசினார் அவர் நீ போகாதே என்று சொன்னார், அதுவே போதுமானதாகக் காணப்பட்டது இல்லையா? இப்போது, இந்த பிற்பகலின் வேளையிலே என்னையே குற்றப்படுத்தும் படியாக நான் உபதேசித்துக் கொண்டிருக்கிறேன், அவர் என்னிடம் அற்புத சுகமளித்தலின் வரத்தை நீ நிச்சயமாய் பெற்றுக்கொள்கிறாய் என்று ஏற்கனவே கூறியுள்ளார். இதை நான் ஒரு உச்சநிலையாகக் கொள்கிறேன். 45கவனிக்கவும். அவன், தேவன் பேசுவதைத்தான், தான் நான் பேசமுடியும் என்று நினைத்தான். எந்தத் தீர்க்கதரிசியும், அவன் தீர்க்கதரிசியாயிருப்பானானால் தேவன் அவன் வாயில் போட்டாலொழிய எதையும் சொல்ல முடியாது. அவன் ஒரு கள்ளதீர்க்கதரிசியாகவோ, அல்லது கூலிக்காரனாவோ இருந்தால், எதையாவது சொல்ல முடியும், ஆனால் நீங்கள் ஏதாவது கூறினால், தேவன் அதை நிறைவேறுதலுக்குக் கொண்டு வருவார். தேவன் கூறினால் அது அந்த வழியில்தான் இருக்கும். கவனிக்கவும் அவன், “தேவன் எதைச் சொல்லச் சொல்லுகிறாரோ அதைத்தான் தன்னால் பேசமுடியும், என்று அவன் கூறியபோது தேவன் அவர்களைத் திருப்பி அனுப்பச் சொன்னார். கவனியுங்கள் பிறகு பிலேயாம் கூலிக்கு வேலை செய்யும், இப்போதிருக்கும் அநேக தீர்க்கதரிசிகளைப் போல வட்டிக்குப் பணத்தைக் கொடுக்கக் கூடியவர்களைப் போல மீண்டும் வந்து இரண்டாம் முறையாகக் கேட்டான் அவன் மீண்டும் தேவனிடத்தில் போனான் இப்போது பாருங்கள் தேவனுடைய பரிபூரண சித்தமும் உண்டு, அனுமதிக்கும் சித்தமும் உண்டு தேவன் தமது தீர்க்கதரிசியைப் போகும்படி அனுமதித்தார் இருப்பினும் அவன் ... அது தேவனுடைய பரிபூரண சித்தம் அல்ல அது அவருடைய அனுமதிக்கும் சித்தம். மேலும், இந்த மத்தியான வேளையில் நான் அதேபோன்று உணருகிறேன். அற்புத வரிசைக்காக வேலை செய்தல். இது தேவனுடைய அனுமதிக்கும் சித்தமாக இருக்கலாம் ஆனால் அது அவருடைய பரிபூரண சித்தம் கிடையாது, நீங்கள் எனது வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும் மேலும் ... அதாவது... 46பாருங்கள் நண்பர்களே, இதைச் சொல்வது மிகவும் கடினம்தான். அதைப் பார்ப்பதும் மக்களுக்குக் கடினம் தான், ஆனால் நான் இல்லை யாராவது இருக்கத்தான் வேண்டும். ஏதோ ஒரு நாளிலே யாரோ ஒருவரை யாராவது எனக்கு வேண்டும் என்று அனுமதிக்கிறார். எனக்காகப் பேசக் கூடிய ஒருவரை, அவர் எனக்காக அனுப்புவார். அதை நான் செய்ய வேண்டியதில்லை ஏனெனில் நீங்களே உங்கள் மீது எதையோ வீசிக் கொள்வதுபோல் அது உள்ளது. பரலோகத்திலுள்ள தேவன் நான் அவ்வளவு மாய்மாலக்காரனாக அவரது மக்களுக்கு முன் நான் நிற்க மாட்டேன் என்பதை அறிவார். அதுசரி ஆனால் இதுதான் உண்மை , நியாயத் தீர்ப்பின் நாளிலே அதற்காக நான் நியாயந்தீர்க்கப்படுவேன் அதை அவர் சொன்னார். மேலும் கவனியுங்கள் இது தேவனுடைய சித்தமாயில்லாமல் இருக்கலாம் ஆனால் நான் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தை நம்புகிறேன். அதுவும் ஃபீனிக்ஸுக்காக அதை நான் அவரிடம் இன்று இங்கே கேட்டுள்ளேன். நான் சொன்னது உண்மை என்று நீங்கள் ஒருவேளை பார்க்கலாம் நான் அறையில் அந்த இரவு சந்தித்த தேவதூதனிடம், அவர் இந்த பிற்பகலிலே இங்கு கொண்டுவரப்படுகின்ற எதையும் தாங்கும்படியாக நிற்கவேண்டும், என்று ஜெபிக்கிறேன் இப்போது, இப்போது, நான் கூறும்போது, அதை நான் செய்வதற்கில்லை ஏனெனில் நான் வெறுமனே கூறுகிறேன், யாரையாவது கொண்டு வாருங்கள். 47இப்போது, இக்கூட்டத்தில் என்னை நடந்து போக விட்டீர்களானால், நான் எற்கனவே குறைந்தது நான்கு மக்களை ஆயத்தமாக்கி வைத்திருக்கிறேன் எனக்கு முன்பதாக, இப்பொழுதே அற்புத விதமாக இங்கேயே சுகமாக் கப்படுவார்கள், ஏனெனில், இப்போதே நான் அதை உணருகிறேன், அவர்களில் ஒருவர் வயதான, தலைமயிர் நரைத்தவர், இன்னொருவர் இளம் வயதுடைய பெண், இன்னொருவர் ஒரு சிறிய பிள்ளை அவர்கள் இப்போதே எனக்கு முன்பாக உட்கார வைக்கப்பட்டுள்ளார்கள், இங்கேயே அற்புத சுகமளித்தல் நடைபெறும். ஆனால் நான் அங்கே வெளியே போய் அவர்களைத் தெரிந் தெடுத்தால், நீங்கள் என்னிடம் குற்றம் காண்பீர்கள் பாருங்கள்? இந்த மாதிரியாக அமைக்கப்பட்ட பெரிய கூட்டங்களுக்காக இந்த வரம் கொடுக்கப் படவில்லை என்று நான் விசுவாசிக்கிறேன், அது அப்படியிருந்தது என்று நான் நம்பவில்லை நான் எல்லாம் வல்ல தேவனால் எங்கெல்லாம் அவர் என்னை நடத்துகிறாரோ ஒவ்வொரு இடத்திற்கும் அவரால் வழி நடத்தும் போது மக்களுக்காக, நீங்கள் ஜெபித்துக்கொண்டிருங்கள் எனக்குத் தெரியவில்லை ஆனால் எதுவானாலும் இவைகள் எல்லாம் சரிவர அமைவதற்கு முயற்சி செய்கிறேன். அவருடைய தெய்வீக சித்தத்தை எங்கு பார்க்கிறேனோ, அங்கே அவருடைய வழிகளில் நடக்கவும் அதில் தரித்திருக்கவும் நான் விரும்புகிறேன், யார் அதுபற்றி என்ன கூறினாலும் பரவாயில்லை அது சரியே. 48இப்போது அவர் பிலேயாமிடம் கீழே போகும்படி கூறினார், நிச்சயமாக நமக்குத் தெரியும் அந்தப் பாதையில் தேவதூதன் அவனைச் சந்தித்தார், ஆனால் அவன் மிகவும் கண் தெரியாதவனாய் பண ஆசை நிறைந்தவனாய் இருந்ததால் அந்த தூதன் தனக்கு முன் நின்று கொண்டிருப்பதைக்கூட அவனால் பார்க்கமுடியவில்லை அவனை ஏற்றி வந்த கழுதை அந்த வயலின் பக்கவாட்டில் திரும்பியது அக்கழுதைக்கு ஓ, என்னே! அம்மனிதனைக் காட்டிலும் அதிகமாக ஆவிக்குரிய பகுத்தறியும் தன்மை இருந்தது. ஆனால் அம்மனிதனோ தன்னுடைய மனதைத் தேவனிடத்திலிருந்து திருப்பி இருந்தான். அன்றொரு இரவில், யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள் நான் சொல்லிக்கொண்டிருந்தேன் (ஒலி நாடாவில் காலியிடம். ஆசி) மக்களுடைய வழியிலே இடையூறை போடுவது நான் சொன்னேன் எது உண்மையோ அது உண்மை நான்... கிறிஸ்தவர்கள் நிச்சயமாக... கிறிஸ்தவர்கள் பார்ப்பார்கள். அது வித்தியாசமாக இருக்கும் இவைகளைப் பார்க்கும்போது நான் சொன்னேன் ஆம் அவர், ஆனால் சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் மிகவும் குருடாயிருப்பர்; அவர்களால் அதைப் பார்க்க முடியாது, இயேசு வருகை வந்த நாட்களில் அப்படியிருந்தும் அந்த மூன்று வான சாஸ்திரிகள் நேரே அங்கு மேலே சென்று அவரை வணங்கினர். அந்த குருவானவர் ஆலயத்திலிருந்து இது சரியா அல்லது அது சரியா என்று விவாதம் செய்து கொண்டிருந்தார். அது உண்மை அந்த சிறிய சூனியம் செய்யும்... 49நினைவில் கொள்ளுங்கள், இது சாத்தானின் வேலை என்றேன். இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்புகொள்பவர்களும் வானசாஸ்திரமும் சாத்தானின் வேலைகளாகும் நான் மெக்ஸிகோவில் இருந்த சமயம் அங்கு சூனியதந்திர வேலை முதலானவை இருப்பதை உணர்ந்தேன். ஆனால் நான் யாரை விசுவாசித்தேன் என்பது எனக்குத் தெரியும். அன்றொரு இரவிலே ஓரிகனில் செய்ததுபோல் அவர் காட்சிக்கு அதைக் கொண்டு வந்து அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார். அது சரி. அது உண்மை ஆனால் மக்களை அதிக நேரமாக அதைக் காண்பதற்கு அமர வைக்கவேண்டியுள்ளது அது தான் காரியமாயுள்ளது. இப்போது இந்த விஷயங்களை அவர் பேசினார். (ஒலிநாடாவில் காலியிடம் அவர் அந்த தூதனைப் பார்க்கவில்லை. (காலியிடம்) அப்பக்மாகத் திரும்பினார். பிறகு அந்த தூதன் வேறொரு பக்கம் சென்று, நின்றார், கவனியுங்கள். அவர், மூன்று இடங்களுக்குச் சென்றார், யாத்திரையின் மூன்று நிலைகளைக் குறிக்கிறது, மூன்று நிலைகள் யாத்திரையில், இஸ்ர வேல் புத்திரரின் பயணத்தில் மூன்று நிலைகள், பிலேயாமின் பயணத்தில் மூன்று நிலைகள். 50நாம் மூன்றாம், மற்றும் கடைசி கட்டத்தில் இருக்கிறோம், நினைவில் கொள்ளுங்கள் பெந்தேகோஸ்தின் காலம், புறக்கணிக்கப்பட்ட ஒரு காலம், சொல்வதற்கு நான் வெறுப்படைகிறேன் பெந்தேகோஸ்தே சபையைப் போல் எந்த சபையிலும் ஒருபோதும் நான் விசுவாசத்தைக் காணவில்லை ஆனால் இது புறக்கணிக்கப்பட்டது ஏனெனில் இது லவோதிக்கேயாவாகியா கடைசி சபை, வெதுவெதுப் பாயுள்ளது கிறிஸ்துவின் வாயிலிருந்து வாந்திப் பண்ணப் படும். ஆனால் தேவன் அதிலிருந்து அவருடைய பிள்ளைகளை அந்த பெந்தெகோஸ்தே காலத்திலிருந்து வெளியே கொண்டுவருவார். நீங்கள் நல்லது நான் ஒரு மகத்தான காலத்தை எதிர்நோக்கிக் கொண்டுள்ளேன் என்று சொல்லலாம். எனக்குத் தெரியும் உங்களில் அநேகர், ஒரு உபதேசம் உள்ளது தீர்கதரிசிகளின் பள்ளிக்கூடம் அவர்கள் மகத்தான சபைகாலம் வருகிறது என்று சொல்லுவார்கள் அதை நம்பாதீர்கள். அடுத்து கிறிஸ்து அவருடைய சபைக்காக வருவதுதான். அதுசரி. அவர் தனிப்பட்டவர்களோடு இடைப்படுகிறார். எனவே ஞாபகம் கொள்ளுங்கள் கடைசி சபைக்காலம் லவோதிக்கேயாவின் சபைக்காலம் தேவனுடைய வாயிலிருந்து வாந்திப்பண்ணப் படுவதான ஒரு வெது வெதுப்பான சபை அது உண்மை அது உங்களுக்குத் தெரியும். 51ஓ, நீங்கள், சகோ.பிரன்ஹாமே, நீர் தனியாகச் செல்லும் என்று சொல்லலாம். நல்லது முழு ஆலோசனைக் கூட்டம் பற்றி என்ன? அப்படித்தான் கத்தோலிக்கச்சபை ஆலோசனைக் குழுவின் நபர்களால் ஆரம்பித்தது. தேவன் மனிதர்களின் ஆலோசனைகளில் செயலாற்றுகிறதில்லை. பாருங்கள்? அந்த எல்லாத் தீர்க்கதரிசிகளின் கூட்டமும் ஆகாபை சமாதானத்தோடு போகும்படி கூறுகின்றனர். ஆனால், யோசாபாத் இன்னும் ஒருவன் இல்லையா என்று கேட்டான். ஆமாம், சிறிது வயதான மிகாயா உள்ளார் ஆனால் மிகாயாவிற்குத் தான் எங்கு நிற்கிறோம் எனத் தெரியும். அவன் தன் தேவனை அறிந்திருந்தான். இதை இப்பொழுது நான் சொல்வதை அநேகர் புறக்கணிப்பார்கள் ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள் என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன் நான் தேவனை அறிவேன். இந்தச் சபையை நாம் மிகவும் பிடித்துவைத்துக் கொண்டுள்ளோம் ஆனால் தேவன் அதில் பிரியப்பட வில்லை. நாம் அதிலிருந்து வெளியே வரவேண்டும், நாம் ஒன்று சேர்ந்து நமது இருதயங்களை ஒன்று சேர்க்க வேண்டும் அதுதான் சரி. 52இப்போது கவனியுங்கள், அவன் அங்கு வந்தபொழுது, இந்தக் கழுதை பார்த்துக்கொண்டு நிற்கிறது முதலில் அந்த வாயிற்கதவின் அருகே அது அவரைப் பார்க்கிறது, அடுத்து ஒரு சந்தியில் பார்க்கிறது, அடுத்ததாக மிகக் குறுகிய அந்த பாதையில் அவர் நிற்பதைப் பார்க்கிறது இறுதியாக அந்தக் கழுதை மனிதக் குரலில் பேசியது பாருங்கள், அது ஒரு ஊமையான கழுதை, ஒரு ஊமையான மிருகம் தேவன், தேவதூதன் ஒரு ஊமையான மிருகம் மூலம் பேசக்கூடுமானால், ஒரு மனிதன் மூலம் அவர் பேசமுடியாதா? மனிதர்கள் அவரைக் காண்ப தற்கு மிகவும் குருடராயிருக்கிறார்கள். அவர் இந்த... ஆபிரகாமுக்கு இந்தக் கல்லுகளாலே பிள்ளைகளை எழுப்ப முடியும் என்று, சொன்னார். என்னே! ஓ என்னே, பிறகு பிலேயாம், இஸ்ரவேல் புத்திரரின் மீது சாபத்தை யிடக் கீழே சென்றான் நாம் அவசரமாக செல்லவேண்டும், ஓ என்னே இது எனக்குப் பிடித்துள்ளது. நிறைய அறைகளை கொடுத்துள்ளார். 53பாருங்கள். கழுதை பேசின பின்பும் கூட அவன் பயணம் செய்து கொண்டிருந்தான் வழியில் கர்த்தரின் தூதன் நின்று கொண்டிருந்தார். மனிதர்கள் இந்த விதமாக வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் செய்யக் கூடிய அவர்களது வழியில் தேவன் பிரியமாக இல்லை. அனலாயிரு அல்லது குளிராயிரு, உள்ளே இரு, அல்லது வெளியேவா. கிறிஸ்தவர்கள் எப்படி உன்மையாக இருக்கவேண்டுமோ, அப்படியில்லாமல் பாவிகள் செய்வது போல் செய்வதை, தேவன் வெறுக்கிறார். ஓ, நான் கிறிஸ்துவுக்காக இல்லாவிட்டால் அவருக்கு எதிராக இருப்பேன். இங்கு நான் நின்று கொண்டு அவருக்கெதிராக பேசிக்கொண்டிருப்பேன். அவரை... நான் அவருக்கு உபயோகமாக இல்லை, அவருக்கு அது ஒன்றும் இல்லை, நான் அவருக்கென்று இல்லையானால், அவருக்கெதிராக இருக்கவேண்டும். ஆனால் நண்பர்களே நான், அவர்தான் தேவ குமாரன் என்று விசுவாசிக்கிறேன். வேதாகமம் கூறுவது போல் அது அவர்தான். அவர் வேதாகமம் கூறுவதுபோல செய்தார். அவரே உன்னதத்திற்கு ஏறினார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் மீண்டும் வருகிறார் என்று வேதாகமம் கூறுவதுபோல் நான் விசுவாசிக்கிறேன். அவர் திரும்பவும் வரங்களை மனிதனுக்குக் கொடுக்கிறார் என்று விசுவாசிக்கின்றேன் எனவே, இன்று நான் திட்டமிடுகிறேன், ஏனெனில் நான் விசுவாசிக்கிறேன். நான் வேறு எப்படியாவது ஜீவிப்பதைப் பார்த்தீர்களானால், நான் பின்னடைந்துள்ளேன், என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள் நான் வித்தியாசமாக ஏதாவது செய்தால் அவ்வாறு ஜீவியம் செய்தால், அந்த பிசாசுகள் மற்றும் அவைகளின் சக்திகளுக்கு முன்பாக நடக்க பயப்படுவேன். 54இது கடினம் என்று எனக்குத் தெரியும், அது என்னை கனவீனப்படுத்துகிறது, மக்களிடம் எதையாவது சொல்ல நான் வெறுக் கிறேன் ஆனால் நண்பர்களே, நியாயத்தீர்ப்பின் அந்த நாளிலே பதிலளிக்க நான் உங்கள் முன்பு நிற்க வேண்டியுள்ளது அது சரி உங்கள் இரத்தம் என் கைகளின் மேல் உள்ளது. நீங்கள், உங்கள் இருதயங்களில் பயபக்தி யோடும், தூய்மையோடும் பரிசுத்த அன்போடும் இருங்கள். அந்த அன்பின் நிலைமையிலேயே எல்லா நாட்களும் எல்லா நேரங்களிலும் நடவுங்கள் பிறருக்கு நன்மை செய்யுங்கள், நல்ல தான தர்மங்களைச் செய்யுங்கள், தேவனை நேசியுங்கள், அவரை ஆராதியுங்கள்; இந்த வழியிலேதான் நீங்கள் வாழ வேண்டியவர்களாயிருக்கிறீர்கள் உங்கள் அயலானையும் உங்களைப் போல நடத்துங்கள். அது சரி. இப்போது இதைக் கவனியுங்கள். பிலேயாம் அங்கே இறங்கினபோது நிச்சயமாக எண்ணியிருப்பான்... இங்கே இன்னொரு தவறுள்ளது முடிப்ப தற்கு முன்பு நான் இப்பகுதிக்குள்ளாக இப்போது செல்லட்டும், நீங்கள் உங்களது சிதறக்கூடாத கவனத்தை இங்கேயே நாம் உச்சக்கட்டத்தை அடையும்வரை கொடுங்கள் ஓ, என்னே அவர் இங்கு இருப்பதாக நான் உணர்கிறேன் ஆம் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். 55பாருங்கள் அங்கே பிலேயாம் இறங்கினபோது இந்த எண்ணத்தோடு வெளியே வந்தான். இப்போது நான் மிகுந்த சத்தமான குரலில் உங்களி டத்தில் பேசுகிறேன். நீங்கள் பரிசுத்தமுள்ள மக்கள், முழு சுவிசேஷ ஐக்கிய மக்கள், பரிசுத்த மக்கள், நசரேனியர், பெந்தேகோஸ்தேயினர், தேவனுடைய சபை, அசெம்பிளி ஆப் காட் மக்கள், ஓ, மற்றும் மீதியானவர்கள் மெத்தடிஸ் டுக்கள், பாப்டிஸ்டுகள் தேவனை நேசிக்கும் அனைவரும் இதைக் கவனியுங்கள். ஆனால் பாருங்கள், பிலேயாம். இதை சபைக்குத் திரும்பவும் கொண்டு வரவேண்டும்; அது நகர்ந்து கொண்டே செல்கிறது. பிலேயாம் அங்கே கீழே வந்தபோது அவன் மக்களை ஏறிட்டுப்பார்த்தான் இஸ்ரவேல் மக்கள் பாவத்தின் வழியின் அட்டவணையில் உள்ள எல்லாவற்றையும் செய்திருந்தனர் தேவனை விட்டுப் பின் வாங்கிப்போயினர் அவர்கள் அப்படியிருந்தார்கள்... (ஒலி நாடாவில் காலியிடம் ) சபை... சிறிய சபை ... தரம்... அவர்கள் மனிதர்களின் வீடுகளை உடைத்தார்கள் இங்கும் அங்கும் ஓடினார்கள் செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவர்கள் செய்தார்கள் அதுசரி அதை முன்னிட்டு மற்றும் அவர்கள் எல்லோரையும் நியாயந்தீர்த்துவிடாதீர்கள் பாருங்கள் நமக்கு அவைகளெல்லாம் இருந்தது அது உண்மை . ஆனால் அவர்கள் கூறுகிறார்கள் ஓ அந்த அந்த அந்த பரிசுத்த ஆவி சபை, அவர்கள் அனைவரும் சத்தம் இடுபவர்கள் பாருங்கள் அவர்களில் ஒரு பாதிரியாரை எனக்குத் தெரியும் அவர் இவ்வாறு செய்துள்ளார் எனலாம். இதன் பின் ஆம் சகோதரரே, சிறிதளவு பணம் இருந்திருந்தால், இந்த மற்றவர்களைப் பற்றியும் இன்னும் அதிகம் சொல்லப்பட்டிருக்கும் ஆனால் இந்நிலைமையை சுகமாக்க அதிகமான பணம் அவர்களிடமிருந்தால், இவர்கள் அவர்களை அப்படியே விட்டுவிட்டார் கள் அவ்வளவுதான் ஆனால், நினைவில் கொள்ளுங்கள், இரண்டிலும் நன்மையும், தீமையும் உள்ளது. 56பிலேயாம் ஜனங்களைப் பார்த்து, அவன், இங்கே பாருங்கள் இப்போது கவனியுங்கள். நிச்சயமாக, ஒரு பரிசுத்த - மாதிரியான தேவன் இவ்விதமான மக்களை, அந்த மாதிரியானவற்றைச் செய்தபோது சபிக்கத் தான் வேண்டும் என அவன் நினைத்தான். ஆனால், அவன் மக்களைப் பார்த்து இப்போது பாருங்கள் அவர்கள் இந்தவிதமானவைகளைச் செய்தார்கள். அதைச் செய்தார்கள். நிச்சயமாக, ஒரு பரிசுத்த தேவன் பரலோகத்தில், இதைப் பார்ப்பதற்கு அங்கு இல்லை. முற்றிலும் எந்த ஆசீர்வாதத்தையும் அந்த சபையோடு வைப்பதில்லை. ஏனெனில், அவர்களைப் பாருங்கள். அவர்கள் இதைச் செய்தார்கள், அவர்கள் அதைச் செய்தார்கள் என அவன் கண்நோக்குப் பார்வையிலிருந்தும், மனரீதியான பார்வையிலிருந்தும் பார்த்து, ஜனங்கள் பரிசுத்த தேவனுடைய தீர்மானத்தின்படிதான் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் என்று முயற்சித்தான். ஆனால் அவன் அவர்களுக்கு முன் இருந்த அடிக்கப்பட்ட கன்மலையையும், வெண்கல சர்ப்பத்தையும், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட அந்த பரிகாரத்தையும் பார்க்கத் தவறிவிட்டான். இந்நாட்களில் அது அப்படியாகவே உள்ளது. மனிதர்கள் சிரித்து, கேலியுடன் அவர்கள் தெய்வீக சுகம் பெற்றவர்கள், அவர்கள் பரிசுத்த உருளைகள், அவர்கள் இதை மற்றும் அதைச் செய்தார்கள் என்று கூறும்போது, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர்கள், மனுஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சபைகளுக்கு முன்பாக அசைவாடிக் கொண்டிருப்பதைக் காணத் தவறுகின்றனர், அது சரி. அது பரிகரிக்கிறது சபைக்காக பாவப்பரிகாரம் செய்யப்பட்டுள்ளது. நீங்களோ, தேவனை அறிந்த ஜனங்களே, தொடர்ந்து செல்லுங்கள் தேவன் உங்களுக்காக இருக்கிறார் எவ்வளவுதான் அவர்கள் உங்கள் மீது சாபங்களைப் போட முயற்சித்தாலும் அது நிறைவேறாது. கிறிஸ்துவின் இரத்தம் அதைப் பிரிக்கிறது தேவன் எந்த மனிதர்களையும் அவர்கள் சுயநீதியின்படி பார்ப்பதில்லை, அவர் பார்க்கும் ஒன்றே ஒன்று அவரது சொந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மட்டுமே அந்த இரத்தத்தின் கீழ் இருக்கும் எந்த மனிதனும், பத்திரமாக பாதுகாக்கப்படுகி றான். ஆமென். 57ஓ, என்னே! இரத்தத்தின் கீழ்........ எவ்வளவு நீங்கள் சத்தமிட்டாலும் கூச்சலிட்டாலும் நான் பொருட்படுத்தமாட்டேன் காலை விடியும்வரை தரித்திருங்கள். அது சரி அவர்கள் இரத்தத்தின் கீழ் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் அடிக்கப்பட்ட கன்மலை வெண்கல சர்ப்பம், இவற்றின் கீழ் இருந்தார்கள் கடந்த வாரத்தில் நாம் பார்த்ததுபோல, ஆட்டுக்குட்டியின் இரத்ததின் கீழ் இருந்தார்கள் அந்த இளம் இரத்தம் வாசலின் கதவின் மேலும், கதவின் மேல்சட்டத்திலும் வைக்கப்பட்டது. அவர்கள் இரத்தத்தின் கீழ் வெளியே சென்றனர் அங்கே வெளியே சென்றார்கள் அவர்கள் பசியாயிருந்தார்கள். தேவன் பரத்திலிருந்து மன்னாவை சாப்பிடக் கொடுத்தார் அவர்களுக்குத் தாகம் இருந்தது. அவர்களுக்குத் கன்மலையின் தண்ணீரைக் கொடுத்தார், அவர்கள் வியாதியுற்றனர், அவர்களுக்கு சுகமாவதற்கான வல்லமையைக் கொடுத்தார். பிலேயாம் அதைப் பார்க்கத் தவறிவிட்டான். அவன் அவர்கள் அடிப் படைவாதிகள்; இப்படியும் அப்படியும் செய்பவர்கள், தேவன் அவர்களைக் கனப்படுத்தவில்லை என்று நினைத்தான் அவன் அவர்களைக் கனம்பண்ண வில்லை. ஆனால் தேவன் அவர்களுக்கு அப்பரிகாரத்தைச் செய்தார், ஆமென். இன்று சபை என்ன செய்தது என்பது ஒரு பொருட்டல்ல. தேவனுடைய பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இன்னும் பாவங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறது ஆமென். 58என்னே! என்னே! நாம் இங்கே நேராக வேண்டிய மட்டும் கூச்சலிடத் தயாராகிறோம், இல்லையா நான் அதை நினைக்கும்போது, இரத்தம்.... இரத்தத்தின் கீழ் தங்களது அறிக்கையை செய்யும் வரை, அவர் அவர்களைக் குமாரரும், குமாரத்திகளுமாய் காண்கிறார். ஆகவே, நீங்கள் தவறு செய்திருப்பீர்களானால் இன்றே அவருடைய இரத்தத்தின் கீழ் வந்து உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள் நாம் கிருபையிலிருந்து விழுந்து விடுமானால், நமக்குப் பிதாவிடம் செல்ல ஒரு வழக்கறிஞர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இருக்கிறார். ஓ, நமக்கு அப்படிப்பட்ட வழக்கறிஞர் இல்லாதிருந்தால், நாம் எங்கேயோ போயிருப்போம் இல்லையா? ஆனால் நாம் மிகச் செல்வாக் குள்ள, இராஜரீக மனுஷகுமாரனின் இரத்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளோம். தேவனுக்கு முன்பாக நாம் தூய்மையும், பரிசுத்தமாயும் இருக்கிறோம் அல்லேலூயா! 59ஃபோனிக்ஸில், இதைச் சொல்வது சட்டத்திற்கு விரோதமானது அல்ல என்று நான் யூகிக்கிறேன். அல்லேலுயா! தேவனுக்குத் துதி என்கிறேன். அவர் எல்லாத் துதிகளுக்கும் பாத்திரர்! அல்லேலுயா! இதை இந்த மாமிச உதடுகளிலிருந்து உச்சரிக்கிறோம். நீங்கள் இராஜரீக ஆசாரியர், வினோதமான ஜனங்கள் ஆவிக்குரிய பலிகளை தேவனுக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். உங்கள் உதடுகளின் கனிகளை துதிகளாக அவருக்குக் கொடுக்கிறீர்கள் என வேதாகமம் கூறுகிறது. ஓ! என்னே ! உங்கள் உதடுகளின் கனிகள் அனுதினமும் துதிகளை மக்களின் முன்பு ஊற்றிவிடுறது. நமக்கு எப்படிப்பட்டதான ஒரு பிரதான ஆசாரியர் இருக்கிறார்; என்னமாதிரியான ஆசாரியத்துவத்தில் நாம் இருக்கிறோம், விருத்தசேதனத்தின் ஆசாரியத் துவம், மாமிசத்தில் அல்ல, ஆனால் இருதயத்தில், (ஆமென்) பரிசுத்த ஆவியானவரால் இருதயம் விருத்தசேதனமடைதல். அது சரி பிறகு நீங்கள் துதிகளையும், ஆராதனைகளையும் தேவனுக்குக் காணிக்கையாக்க முடியும். ஆவிக்குரிய பலி, உங்கள் உதடுகளிலிருந்து அவருக்குத் துதிகளை ஊற்றுங்கள். 60அன்றோரு இரவு, மக்கள் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய, குருட்டுக் (பார்வையற்ற) குழந்தை அதன் தாயின் கரங்களில் படுத்திருந்தது அவனது சிறிய கண்கள் குருடாயிருந்தன. நான் அதற்காக ஜெபித்தபின்னர், என்னுடைய கரங்களில் இப்படி நான் பிடித்துக்கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அதை பார்த்துக்கொண்டு, அம்மா, இது வெளிச்சத்தைக் காண்கின்றது என்று சொன்னேன். அவள் அதை நோக்கிப் பார்த்தாள். அவளது கைகளை அதற்கு முன் ஆட்டினாள். அது அதன் சிறிய கண்களை சிமிட்டியது. நான் கையை எடுத்து, அப்படியே சுற்றியபோது அதுவும் அதை அப்படியே பின்தொடர்ந்து பார்த்தது. ஏன், மக்கள் அப்படியே எழுந்துவிட்டார்கள் அந்த தெப்பம் கட்டுபவர்கள் துதிகளினால் கோஷமிட்டனர் யாரோ எழுந்து, அவர்கள் மிகுந்த கூச்சலிடுகிறார்கள் என்றனர். நான், “அவர்கள் அமைதியை அடக்க நினைத்தாலும், அவர்கள் தேவனுக்குத்துதி செலுத்துவார்கள், என்று விசுவாசிக்கிறேன்” என்று சொன்னேன் ஏதோ நடக்கவிருக்கிறது ஆமென். அக்கவிஞன், இப்படிப் பாடியதில் ஆச்சரியமில்லை; ஆச்சரியமான கிருபை! எவ்வளவு இனிய சத்தம், என்னைப் போன்ற இழிவானவனை இரட்சிக்கக் கூடியது, ஒரு சமயம் நான் காணாமல் போயிருந்தேன் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளேன் நான் குருடாயிருந்தேன், இப்போது காண்கிறேன் ஓ! என் இருதயத்தில் பயத்தை கற்றுத் தந்த கிருபையாய் இருந்தது அவரது கிருபையால் நான் பயத்திலிருந்து விடுதலையானேன். எவ்வளவு மதிக்கத்தக்கதாக அந்த கிருபை தோற்றமளித்தது நாம் முதலாவதாகத் துவங்கிய அந்த மணிநேரம்! (ஓ, என்னே) பத்தாயிர வருடங்களுக்குப் பின் நாம் அங்கே அது நமக்கு அவரது துதியை பாடக் குறைந்த நேரம் இருக்காது, நாம் முதலாவதாக துவங்கிய அந்த மணிநேரம் முதற்கொண்டு. 61எவ்வளவு ஆச்சரியமானது! எட்டி பெர்ரோநெட், அவர் இறக்கும் சில மணிநேரங்களில் அவர் மிகுந்த சத்தமிட்டதில் ஆச்சரியமில்லை; சிலுவைக்கு முன்பதாக தம் கரங்களை உயர்த்தி சத்தமிட்டார். எல்லா வாழ்த்துக்களும் இயேசுவின் நாமத்தின் வல்லமைக்கே! தேவதூதர்கள் சாஷ்டாங்கமாய் விழட்டும்; இராஜரீக கிரீடத்தை முன் கொண்டுவரட்டும், எல்லாவற்றுக்கும் மேலான கர்த்தருக்கு முடிசூட்டுவோம். என்னே! வயதான, குருடாயுள்ள பேனி கிராஸ்பை தன் வாழ்நாட்களிலே ஒருபோதும் கண்டதில்லை , அவள் உரத்த சத்தமிட்டாள் ஓ அன்பான இரட்சகரே, என்னைக் கடந்து போய்விடாதேயும், என் தாழ்மையான அழுகைக்கு செவிகொடும் மற்றவர்கள் உம்மைக் கூப்பிடும் வேளையிலும் என்னை விட்டுக் கடந்து போகாதேயும் கர்த்தாவே! எனக்கு என்ன தருவீர் தன் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்கும் ஃபேனி கிராஸ்பைக்கு என்ன தருவீர்? அவள் எல்லாவற்றுக்கும் மேலான ஊற்றைக் கண்டு கொண்டாள்... (ஒலிநாடாவில் காலியிடம்) நான் என்ன கூறுகிறேன் என்பதைக் காண்கிறீர்களா? ஜீவனைக் காட்டிலும் அது எனக்கு மேலானது (ஒலிநாடாவில் காலியிடம் முகத்திற்கு முகம், அவரை நோக்கிப் பார்க்க எடு... (காலியிடம்...) நித்தியம்.... (காலியிடம்) 62ஆசிரியர் (காலியிடம்) பிதாவே, இந்த மத்தியான நேரத்திலே எனக்கு உதவிசெய்யும் இது உம்முடைய வல்லமை இறங்குவதான ஒரு காட்சியாக அமையாமல் இருக்கட்டும், ஆனால், ஓ தேவனே, இன்றைய பிற்பகலிலே இந்த பிரசங்க பீடத்திலே வருகின்ற அனைத்து ஆவிக்குரிய பிரகாரமான இஸ்ரவேலின் புத்திரர்கள், உம்முடைய இரட்சிப்பின் வல்லமையால் களிகூருவார்களாக அவிசுவாச முள்ளவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக அன்பான தேவனே இதைச் செய்யும் அவர்கள் அடுத்த ஞாயிறன்று மற்றும் மற்றும் இவ்வாரத்தின் சில சமயம் சிலுவையின் பாதத்தின் கீழ் தங்களைத் தாழ்த்தி இவ்வாறு சொல்வார்களாக. தேவனே நான் தவறாயிருந்திருக்கிறேன் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை உள்ள மக்களை துன்புறுத்தியிருக்கிறேன். அவர்களைப் பரிசுத்த உருளையர் என்று கூறியுள்ளேன்; அவர் களை எல்லாவிதமாகவும் கூப்பிட்டிருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் இரத்த மும் வல்லமையும் அவர்கள் முன்பதாக சென்று கொண்டிருந்ததை நான் பார்க்கத் தவறிவிட்டேன். ஓ கிறிஸ்துவே உம்முடைய ஜனங்களை நீர் உற்சாகப்படுத்தும் ஓ! யாக்கோபே உம்முடைய கூடாரம் எவ்வளவு தெய்வீகமாய் அமைக்கப் பட்டுள்ளது, ஓ அவர்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அது தெய்வீகமானது, அதில் மகிழ்ச்சியுண்டு, பாவத்திலிருந்து விடுதலையுண்டு, சுகமாக்கும் வல்லமை அங்குண்டு, எல்லாமே கூடாரத்தில் உண்டு. ஓ தேவனே! இந்த பிற்பகலிலே, குருடாயிருக்கும் பிலேயாம், இதைக் கண்டு, பரலோகத்திலிருக்கும் தேவனை மகிமைப்படுத்துவானாக அவருடைய மகிமைக்கென்று அவருடைய நாமத்தில் கேட்கிறோம் ஆமென். 63சிறிது நேரம் இங்கிருக்கக்கூடிய மற்றவர்களை முன்னதாக வரும்படி கேட்டுக்கொள்கிறேன் எல்லோரும் உங்கள் இருக்கைகளில் அமர்ந்தி ருங்கள். நமக்கு இப்போது... உங்களில் ஒரு சகோதரர் பிரசங்கபீடத்திற்கு முன்பாக வரட்டும் நமக்கு இப்போது நினைவில் வையுங்கள் அருமை நண்பர்களே தேவனுடைய வல்லமை ஒரு காட்சியாக வைக்கப்படுவதல்ல உங்களுக்குக் கேட்கிறதா? இந்த பிற்பகலிலே யெகோவா தேவன், என் இரட்சகர் இயேசு கிறிஸ்து எனது ஜெபத்தைக் கேட்பாரானால் இங்கு கொண்டுவரப்பட்ட மக்களை அற்புதத்தின் வழியாக சுகமாக்குவார். பிறகு இன்னும் கிறிஸ்துவை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லையானால்... ஃபோனிக்ஸுக்கு... என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டேன், என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டேன். நான் உங்களுக்குச் சொல்ல முயற்சித்துள்ளேன் உங்களுக்கு உபதேசம் செய்யவும் முயற்சித்துள்ளேன். வார்த்தையின் மூலம் உங்களுக்குக் காண்பிக்கவும் முயற்சித்துள்ளேன். தேவன் தம் வல்லமையினால் தம்மை வெளிப்படுத்தினால் அந்த ஒன்றையே நான் செய்யக்கூடும், பிறகு நான் இப்படி விசுவாசிக்கிறேன், தேவன் அப்படிச் செய்வாரானால் நாம் இங்கு பீடஅழைப்பைச் செய்யும்போது, பாவிகள் தங்களை உணர்ந்து அழுவார்கள், கிறிஸ்தவர்கள் திரும்பிப்போய் ஒருவர் கரங்களை ஒருவர் குலுக்குவார்கள் அப்போது ஒரு எழுப்புதல் இங்கே உண்டாகும். 64இரண்டு மூன்று எழுப்புதல்கள் இங்கே ஆரம்பித்துவிட்டதாக நான் கேள்வியுற்றேன் சகோ.ஜேம்ஸ் அவுட்லா ஒரு எழுப்புதலை உண்டாக்குகிறார் என்று நம்புகிறேன் அதேபோல், இப்பட்டணத்திலுள்ள சில சகோதரர்களும் கூட எல்லா சபைகளிலும், எல்லாவிடத்தும் இந்த எழுப்புதல் உண்டாகியுள்ளது என்றும் மக்கள் கிறிஸ்துவிடம் வருகிறார்கள் என்றும் நான் நம்புகிறேன். ஓ, என்னே! நாம் இப்போது பயணத்தின் கட்டத்தில் உள்ளோம் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அப்படிச் செய்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள் நான் உங்களை இன்னும் ஒன்று கேட்க விரும்புகிறேன் (சாகோ ஹீப்பர், ஒரு நிமிடம் மேடையிலிருந்து வெளியே வருவதற்குத் தயாராகிறீர்களா?) இப்போது நான் வியக்கிறேன் இன்று இங்கு நடப்பதை உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்காவிட்டால், நண்பர்கள் நீங்கள் நம்பவில்லை என்றால்... 65கடந்த வாரம் இங்கு நமது கூட்டங்களில் அருமையான அந்தக் கூட்டங்களிலே ஏதோ விஷயங்கள் நிகழவேண்டியிருந்தது. ஆனால் இரண்டு வாசல்காப்போர் எனது பக்கத்திற்கு நேராக நின்றுகொண்டிருந்தார்கள், அப்போது காக்கை வலிப்புள்ள ஒரு ஆவி துரத்தப்பட்டபோது, அந்த இரு வழிகாட்டிகளும் கீழே போய்விட்டார்கள். ஒருவர் ஒருபக்கமும் இன்னொருவர் முன்னோக்கி விழுந்தும் மற்றும் ஒருவர் பின்னோக்கியும் ஓடினார்கள். இன்னும் சில மணி நேரம் கழித்து அவர்கள் ஒரு பெண்மணியைக் கொண்டுவர முயற்சித்தார்கள், ஆனால் முடியவில்லை. ஒரு நல்ல பெண்மணி. அப்பட்டணத்தில் பெரிய வியாபாரம் செய்யும் பெண்மணி, ஒரு கடை வைத்திருந்தாள் அதில் பெண்களது துணிமணிகள் மற்றும் காரியங்களை விற்ற ஒரு அருமையான பெண்மணி. இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவள் அங்கே ஒரு உணவகத்தின் முன்பாக ஒரு பைத்தியக்கார நாயைப் போல வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தாள் பாருங்கள்! அவர்களால் முடியவில்லை ... பாதாளத்தின் வல்லமைகள் கட்டவிழ்க்கப்பட்டு, பிசாசுகள் ஒருவரிடத்திலிருந்து மற்றவர்களுக்குப் போகின்றன. இப்போது, நான் மேற்கோள் இட்டு ... நான் மேற்கோள் இட்டு ... அதை மறுபடியும் ... தொலைவில் கவனியுங்கள் ஞாபகம் கொள்ளுங்கள். இது சாத்தானை வெளியே துரத்துதல், என் இருதயத்தின் மேல் உள்ள என்னுடைய வேதாகமத்துடன் நண்பர்களே, அது மனிதர்களைக் கட்டி வைத்திருக்கும் அந்தத் தீய சக்திகளை விடுவிக்கிறது அந்த வல்லமை வெளியே வரும்போது அந்தப் பிசாசு, ஏதாவது இடமிருக்கும் இடத்தில் எங்காவது சென்றுவிடும் இயேசு லேகியோனை, துரத்தும்போது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தப் பிசாசுகள் எங்களை இந்த பன்றிக் கூட்டத்திற் குள் போகும்படி அனுமதியுங்கள் என்று கூறின். சரியா? அதற்கு அவர் அப்படிச் செல்ல அவைகளை அனுமதித்தார். அவை அங்கே சென்று, ஆயிரக்கணக்கான அந்தப் பன்றிகள், ஆற்றினுள் ஓடி ஆற்றில் மூழ்கி விட்டன. அது சரியா? 66இப்போது, நினைவு கொள்ளுங்கள், அருமையான நண்பர்களே, முழு இருதயத்தோடு இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மத்தியில் ஏதாவது சந்தேகப்படும்படியான எண்ணம் இருந்தால் இந்தக் கட்டிடத்தில் இப்போது இருக்காதீர்கள். ஏனெனில், இங்கு பைத்தி யங்கள், குருடு, செவிடு, மற்றுமெல்லாம் கொண்டுவரப்பட்டுள்ளன. நீங்கள் முழுமையாக அமைதியாக இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் தலைகளைக் கீழே தாழ்த்த முடியவில்லை என்றால், இங்கு இருக்க வேண்டாம். இப்போது ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஒரு சிறிய இடைவெளிவிட முயற்சிப்போம். நிச்சயமாக, கர்த்தர் எதாவது சில அற்புதங் களை நிகழ்த்த வேண்டும். இப்போது, நான் நிறைய என்று சொல்லவில்லை, ஆனால் ஒன்று அதுவும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்று அந்த ஒன்றோடு கூட எனக்குக் கிடைக்காமல் போகலாம், நான் சொல்ல முடியாது நான் என்னை முழுவதுமாக தெளிவாக வைத்துக் கொள்கிறேன், பின்னும் முன்னும் சரிபார்த்துக் கொள்ளுங்கள், இருமுறை அதனை சரிபார்க்கவும், அப்போது உங்களுக்குத் தெரியும். 67ஞாபகம் கொள்ளுங்கள். இது ஒரு சுகமளிக்கும் வரம் என நான் கூறியுள்ளேன். எல்லோரும் என்னைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் அங்கீகரித்தால் ஆமென் என்று சொல்லுங்கள் (கூட்டத்தார் ஆமென் என்கின்றனர்) அந்தத் தூதன் ஒருபோதும் என்னிடம் ஒரு அற்புதத்தைச் செய்யும்படிச் சொல்லவில்லை எல்லோரும் அதைக்கேட்டு, ஆமென் என்று சொல்லுவார்களா, அவர்கள் என்னை விசுவாசிக்கும்படி நான் அவர்கள் ளுக்குச் செய்து, நான் ஜனங்களுக்காக ஜெபித்தால் அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று என்னிடம் அவர் சொன்னார். ஆமென் என்று சொல்லுங்கள் ஆனால், விசுவாசத்தின் மூலம் இந்த பிற்பகலிலே இங்கு கண்களுக்குப் புலப்படாதிருக்கும் அவரில் உள்ள விசுவாசத்தின் மூலம் சர்வ வல்லமை யுள்ள தேவனால் முழுவதும் குருடாயிருப்போரின் கண்களைத் திறக்கவும் பிறவியிலேயே செவிடாய்ப் பிறந்தவர்களின் காதுகள் கேட்கப்படவும் ஊமை யானவர்கள், பேசப்படவும் நான் அனுமதி பெற்றிருக்கிறேன். மிகவும் கொடூரமான உடல் அமைப்புக் கொண்ட முடவர்கள், குணமாக்கப்பட்டு மக்களின் கண்களுக்கு முன்பதாக, காணமுடியாத அந்த தேவனுடைய வல்லமையால் நேராக நடந்து சென்றார்கள். 68ஆனால் நினைவு கூருங்கள். இது என்னுடைய சொந்த சக்தி அல்ல, இது அவருடைய வல்லமை. எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த என்னிடத்தில் ஒரு வழியுமில்லை . நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன். உங்கள் கணவர், உங்கள் சகோதரர் போன்று நான் ஒரு மனிதன். ஆனால் அவர் தேவன், அந்த தேவதூதன், தெய்வீகமான ஒன்று தேவனுடைய சிங்காசனத் திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று பாருங்கள். அது... (காலியிடம்) தேவதூதன் மற்றும் தேவனுடைய வார்த்தை ... (காலியிடம்)... இங்கே அற்புதங்கள்... (காலியிடம்).. அது சரியா? இப்போது, எத்தனைபேர் என்னோடு விசுவாசிக்கிறீர்கள்? நான் உங்களைப் பார்க்கட்டும்... காலியிடம்... நான் கண்டுகொண்டேன்... நன்றி. இப்போது மெதுவாக சிறிது ஓய்வெடுக்க வாய்ப்புக் கொடுப்போம். எல்லோரும் நின்று கனத்துடன், நம்பிடுவாய் பாடல் பாடுவோம். இப்போது எல்லோரும், நல்லது தேவதூதன் அந்தப் பாடலை விரும்புகிறார். இப்போது எல்லோரும் அமைதியாகவும் அன்புடனும் இருப்போம். நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? ஆமென் என்று சொல்லுங்கள். 69நான் என்னை முற்றிலும் அமைதியாக வைத்துக் கொள்ளட்டும். நாம் இப்போது பாடும்போது எல்லோரும் மெதுவாகப் பாடுவோம். விசுவாசிப்பாய், விசுவாசிப்பாய் யாவும் கை கூடிடும், விசுவாசிப்பாய். விசுவாசிப்பாய், விசுவாசிப்பாய் யாவும் கை கூடிடும், விசுவாசிப்பாய். நாம் யாவரும் நம் தலைகளைத் தாழ்த்தி மெல்லிய குரலில் (மெளனமாக) பாடுவோம். (சகோ. பிரன்ஹாம் மெல்லியதாக மெளனமாக பாட ஆரம்பிக்கிறார் - ஆசி) ஓ, நன்றி தேவனே! நீங்கள் மெளனமாக பாடும்போது, நான்... 70இப்போது நாம் உண்மையான கனத்தோடு கர்த்தராகிய இயேசுவை நோக்கிப் பார்ப்போம் ஓ தேவனே! நான் இங்கு எவ்வளவு தாழ்மையாக உணர்ந்து நின்று கொண்டிருக்கிறேன். இந்த, ஆராதனை கூட்டத்தின், இந்தப் பகுதியிலே இதை உம்மிடம் கொண்டு வருகிறேன் தகப்பனே மனிதர்களிடம் இவையெல்லாம் நடக்கும் என்று சொல்கிறேன் ஓ தேவனே! நான் இதைப் பிரசங்கம் பண்ணியிருக்கிறேன்...? இன்று கூலியாளாகிய பிலேயாம் தீர்க்கதரிசி... அருமை இயேசுவே நீர் சாத்தானிடம் உன் தேவனாகிய கர்த்தரை நீ பரீட்சை பாராதே என்று சொல்லியிருக்கிறது எனக்குத் தெரியும்', என்றீர். சாத்தான் அதற்கு ஆமாம் ஆனால் இது வேதத்தில் எழுதியுள்ளதே... என்று சொன்னான் ஆம் தகப்பனே ! சாத்தான் என்றும் பரீட்சை செய்ய விரும்புகிறான். அருமையான தேவனே, எல்லாக் காரியங்களும் உம்முடைய கரங்களி லுள்ளன. இன்று என் இருதயத்திலிருந்து உம்மிடம் ஜெபிக்கிறேன். எப்போதும் செய்வது போல அறையினுள் எனக்குள்ளாக இந்த மின்சார ஒலிபெருக்கி மூலம் அப்படிச் செய்கிறேன் ஆனால், பிதாவே என்னுடைய இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர் உம்முடைய ஊழியமானது மிகவும் அலட்சியம் பண்ணப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன் உள்ளே உம்முடைய பிள்ளைகள், விடுதலையாக்கப்பட்டு.......... நீர் உம்முடைய சபையை எடுத்துக்கொள்ளும் மணிநேரம் வந்துவிட்டது. 71எனக்கு உதவிச் செய்யும், அருமை தகப்பனே, இன்றைக்கு இந்த ஏழையான தகுதியில்லாத உமது ஊழியக்காரனுடைய வார்த்தைகளை நீர் கனம் அடையச் செய்வீரா? அந்த இரவினிலே என்னைச் சந்தித்த அந்த தேவதூதன் உன்னுடைய ஜெபத்திற்கு முன்பு ஒன்றும் நிற்கமுடியாது என்று கூறினார். அன்புள்ள தேவனே, உம்முடைய பரமசித்தம் அதுவாக இல்லையென்றால், அதை தயவுகூர்ந்து நிறுத்திவிடும். ஆனால், தகப்பனே நீர் எல்லாம் அறிவீர் இந்த மக்கள் எனக்குச் செவிகொடுப்பார்கள் என்பதற்காக அல்ல, நீர் எனக்கு செவிகொடுத்து இந்தப் பட்டிணத்திற்கு ஒரு எழுப்புதலைக் கொடுக்க நான் விரும்புகிறேன். ஓ, தேவனே எனக்குத் தெரிந்தவரை நான் ஃபோனிக்ஸுக்கு போய்க் கொண்டிருந்தபோது என் இருதயத்தை ஏதோ உந்துவது போன்று இருந்தது உதவி செய்யும். அருமை ஆண்டவரே, பழைய பாணியின் எழுப்புதல் ஆரம்பிக்கட்டும் உமது ஊழியக்காரன் சில நாட்கள் இந்த அழகிய, சிறிய நகரத்தில் இருக்கட்டும். இப்போது எங்களை ஒன்றாக ஆசீர்வதியும், என்னை அபிஷேகியும் கர்த்தாவே! தயவு கூர்ந்து உம்முடைய தூதன்... உமக்குத் தெரியும் தகப்பனே, உமக்கு எல்லா துதிகளையும் மகிமையையும் செலுத்துகிறேன் எல்லா தினசரி பத்திரிக்கைகள், மற்றும் வார பத்திரிகைகளிலும், நான் சுகமாக்குபவன் இல்லை , என்று கூறியுள்ளதை நீர் அறிந்திருக்கிறீர். நீரே சுகமாக்குபவர், தாழ்மையுடன் இருக்க விரும்புகிறேன் தகப்பனே உமக்கு துதிகளை செலுத்தும் தூசியேயன்றி நான் வேறொன்றுமில்லை. தகப்பனே இந்த ஏழைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் துன்பப்படுகிறவர்களுக்கும் உதவிசெய்ய, என்னை அனுமதியும் அப்படிச் செய்வீரா? தகப்பனே, அடுத்த வாரம், நாங்கள் ... தகப்பனே நீர் என்ன சொல்கிறீரோ அதன்படி செய்யும் இன்று இதை அனுமதியும், உமது ஊழியனுக்கும் உம்முடைய பிள்ளைகளுக்கும் எதிராக அதை வைக்காமலிரும் உம்மிடம் ஜெபிக்கிறேன். தகப்பனே, இப்போதே தெய்வீக வல்லமையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுத்தருளும் ஆமென் பக்தியோடு இப்போது அமரவும். 72இப்போதும் வாயில் காப்போர்களே, பதற்றத்தோடு இருக்கும் குழந்தைகள் முழு அமைதியுடன் இருக்கச் செய்யுங்கள் நண்பர்களே, தாய்மார்களே உங்கள் குழந்தைகளை இங்குமங்குமாக சுற்ற விடாதீர்கள் சிறு பிள்ளைகள் அழுதால், அவர்களுக்கென்று ஒரு இடம் இல்லையா? வாயில் காப்போர்களே... எத்தனை வாயில் காப்போர்கள் இந்த கட்டிடத்தில் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை ஜனங்கள் பார்க்கலாமா? நீங்கள் இந்த வேலை செய்யும்படியான உத்தியோகத்தில் இருக்கிறீர்களா? சரி பார்த்துக் கொள்ளுங்கள் தாய்மார்களுக்கு உதவி செய்யுங்கள் ஒரு வரையும் இந்தத் தரையில் ஓட அனுமதிக்காதீர்கள். ஏனெனில் இது மிகவும், மிகவும் புனித மான நேரம். சுகமாக்கும் ஆராதனைகளை கவனியுங்கள்....?... வியாதிகளுக்குரிய அதிர்வுகளர்?... சரி... நல்லது... சரி இப்போது அத்தகைய அதிர்வுகளை அனுப்பும்படியான சிலர் உங்களுக்குள் இருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் என் கரத்தைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன், இப்போது, இது இன்னுமொரு நேரம்?... பாருங்கள் என்னவென்று எப்படி இது வெண்மையாக உள்ளது? எத்தனை பேர் என் கரங்களில் அதிர்வுகளைப் புரிந்து கொண்டீர்கள்? பார்த்தீர்களா? உங்கள் கரங்களைப் பார்ப்போம்? அவ்வளவுதான் இந்தக் கூட்டத்தில் உள்ளார்கள் என்கிறீர்களா? ஏறக்குறைய ஒரு புதிய கூட்டம் இங்குள்ளது இதை நம்பக் கடினமாக உள்ளது. இல்லையா? 73நண்பர்களே, இது அதிர்வுகளால் வருகிறது. என் கரத்தின்மேல் நீங்கள் இதைக் காணலாம் என் கரம் இரத்தவர்ண சிவப்பாக மாறுகிறது, அதன்மேல் வெண்மையான பருக்கள் குதிக்கும். அது வியாதிக்கேற்பதாயிருக்கும் மக்கள் அவர்களுக்கு என்ன வியாதி உள்ளது என்று என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. அந்த ஆவியானது கீழே இறங்கி அவர்களுக்கு என்ன வியாதி உள்ளது என்பதைச் சொல்லும். கடந்த வாரத்தில் மருத்துவர்களால் நான் பரிசோதிக்கப்பட்டேன், ஒவ்வொரு மருத்துவரும் மருத்துவமனையி லிருந்து வியாதியஸ்தரை வெளியே கொண்டு வருகிறார்கள். (ஒலிநாடவில் காலியிடம்) இப்போது. அது சரி இப்போது நான், நான்... இந்த நபர். எப்போதும், எனக்குப் பின்பு நின்று கொண்டிருக்கிருக்கும் இந்த நபர்... இப்போது ஒரு கணம்....? அவர்களுக்கு தற்சமயம் என்ன என்று பார்க்கிறேன் இப்போது எல்லோரும் உட்காருங்கள். அமைதியாக உண்மையாயிருக்கவும். எல்லோரும் அமரவும் இப்போது எல்லோரும் இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் நினைவுகூருங்கள், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு எச்சரிப்புக் கொடுக்கிறேன் நீங்கள்..?... முன்பதாக, அவருக்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை என்றால், நான் இல்லை...? அதற்கு அது என்ன என்று நான் கண்டுபிடிக்கும் மட்டும். அந்த மனிதரை இங்கு கொண்டு வாருங்கள் ஆம், பெண்மணியே, உங்களுக்குக் கட்டி இருந்து புற்றுநோயாக மாறிவிட்டது அது சரியா? அதுவும் உங்களுக்கு கொஞ்சம் அதைவிட அதிகமாக உள்ளது அதுவும் சரியா? எது சரியானது என்று உங்களுக்கு நான் சொன்னேனா? புற்றுநோய்? உங்களுடைய பெண்...? மேலும் நீர் கவலையுடன் உள்ளீர்...? உங்களுக்கு பெண்களுக்குரிய பிரச்சனைகள் உள்ளன. உங்களுக்கு... ஒரு வகையான அறுவை சிகிச்சை உங்களுக்கு நடந்துள்ளது, அது இன்னும் தொற்றுநோயாகி, உங்கள் வயிற்றில் தொந்தரவு செய்கிறது..... அது ? இப்போது இங்கு பாருங்கள் அங்கே இருப்பவர்களை இந்த வரிசையில் இங்கே வரச் சொல்லுங்கள். உங்களுக்குப் புற்றுநோய் இருக்கிறதா? (ஒலிநாடாவில் காலியிடம்) நீங்கள் துன்பப்படுகிறீர்களா?... அதுதான் அந்த கிருமி... நான் காண்கிறேன்... நான் .... பகுத்தறிய... இப்போது, நின்று கொண்டிருக்கும் உங்களுக்கு நீங்கள் என் கரத்தைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன், இங்கு உங்களை என்னால் வரவைக்கக் கூடுமானால் நீங்கள் இங்கே பின்பக்கம் பார்க்கலாம் பாருங்கள்? கூட்டத்திலுள்ளவர்களே, இப்போது உங்கள் தலைகளை உயர்த்துங்கள். இங்கே நான் கடந்து போகிறேன் நீங்கள் என் கரத்தைப் பார்க்கும்படி விரும்புகிறேன். கரத்தை இங்கே நீங்கள் பார்க்கும்படி விரும்புகிறேன் பாருங்கள், எவ்வளவு வெண்மையாக என் கரமே உள்ளது? உங்களால் பார்க்க முடிகிறதா? எப்படியென்று பாருங்கள்.....? இப்போது இங்கே கவனியுங்கள் நான் என் சொந்தக் கரத்தை எடுத்து, அங்கே வைக்கும்போது இப்போது இதைக் கவனியுங்கள் என் கரத்தை அங்கிருந்து எடுத்து விடுகிறேன்.....? கரம் அதன் மேல், உங்களால், இங்கே கவனிக்கமுடிகிறதா? என் சொந்தக் கரத்தை அதன்மேல். பாருங்கள்? எவ்வளவு வெண்மையாக இருக்கிறது? இப்போது அந்தப் பெண் அவளது கரத்தை வைத்திருக்கிறாள் அங்கே அது உள்ளது. இருளும், சிவப்புமாக இப்போது, எனது கரம் நெருப்பின் மேல் உள்ளது போன்று உணருகிறேன். அதைப் பாருங்கள்? (சகோ.பிரன்ஹாம் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார், மக்களிடம் மேலும் எழுபத்தைந்து விநாடிகள் பேசிக்கொண்டிருக்கிறார், அவ்வார்தை களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது) 74இப்போது, இங்கு எல்லா இடங்களிலும் கூடியிருக்கும் எல்லா மக்களும் உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். நான்... எனக்கு..... பொறுமை தேவை, என் கைகளை கவனிக்கும்படியாக நான் விரும்புகிறேன். இப்போது, உங்கள் தலையைத் தாழ்த்துங்கள். ஏனெனில், அந்தப் பெண்மணிதான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாள் ஏனெனில் அது வெளியே வந்து விட்டால்.....?... நினைவு கூருங்கள், நீங்கள் உங்களையே .... புற்றுநோயால் இறக்கலாம்....? 75இப்போது...? இப்போது, என்ன என்பது இங்கே... அந்தப் பெண்ணுடைய புற்றுநோய் இறந்துவிட்டது, அந்தக் கிருமி, அதிலிருந்து வெளியேறி ஜீவன் அதிலிருந்து புறப்பட்டுவிட்டது, இப்போது இங்கே உங்களில் அநேகர்.... எத்தனை பேருக்கு? இதுதான் இங்கே நடக்கிறது. இரக்கம்..... தேவை? அவருக்கு ஜெப அட்டை இருக்கிறதா? ஜெப அட்டையை வைத்திருப்பவர்கள், இப்போது பாருங்கள், இப்போது இதை நினைவு கொள்ளுங்கள் எழுபத்து இரண்டு மணி நேரத்தில் எப்போதாவது நீங்கள் உண்மையாகவே சுகவீனம் அடைவீர்கள் நிறைய வாந்தி எடுப்பீர்கள். இப்போது இதை ஞாபகம் வையுங்கள். ஏனெனில் புற்றுநோய் இறந்து விட்டதால் அதிலிருந்த ஜீவன் ஏன் வெளியேறுகிறது? அதன் பிறகு ஜீவன் போன பின்பு ....?.... நீங்கள் சுகவீனம் அடைவீர்கள்......?... இதை நகர்த்துங்கள் நண்பர்களே! ஒரு குப்பியில் போட்டு வைத்தால்............ 76ஓ நித்திய தேவனே, உம்முடைய ஊழியக்காரனுடைய ஜெபத்தைக் கேளும். அவர்கள் ஒருக்கால்.......... இன்றிரவு நின்று கொண்டு ஊழியத்தின் எல்லாமுமாக...? நீ புற்றுநோய் எனப்படும் பிசாசே, மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் வந்து உன்னை சந்திக்கிறேன் அவளை விட்டு வெளியே வரும்படி நான் கட்டளையிடுகிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், புற்றுநோயாகிய ஆவியே, அந்த பெண்ணைவிட்டு வெளியே வா..... உமக்குச் சித்தமானால் எனக்கும்...... அவர்களது... எடுக்கவில்லை ... ஆனால் அவர்கள் வரட்டும் வருபவர்களிடம் விசுவாசம் இருந்தால் அது ..... செவிடு, ஊமை..... பிறகு எனக்குத் தெரியும். பிதாவே அது உம்முடைய.....? இப்போது அப்படி அவர்களிருப்பார்கள் ளானால்... தெரிந்துகொள்ளபட்டும்..... ஒன்றுமில்லாமல்... பிறகு தந்தையே எனக்குத் தெரியும் நீர் இங்கு பிரசன்னமாயுள்ளீர் ஆனால் எனக்குத் தெரிகிறது, இது உம்முடைய சித்தம்... நான் வரிசையில் வருபவர்களை, எந்த சுகமாக்குதலும் இல்லாமல் கடந்து செல்லச் செய்கிறேன் ....? செவிடு ஊமை அல்லது குருடு, வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள், உமது வல்லமையை, காட்சியாகவையும் தகப்பனே...?.... ஓ தகப்பனே உமது ஊழியக்காரனையும் ஜனங்களையும் மன்னியும். உம்முடைய ஊழியனுடைய ஜெபத்திற்கு, இப்போது பதிலளியும்......... 77ஊமையான ஆவியாகிய உன்னிடம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உனக்கு முன்பாக வருகிறேன், அந்த மனிதனை விட்டு வெளியே வா. அவளைவிட்டு வெளியேறும்படி உனக்குக் கட்டளையிடுகிறேன். (சகோ.பிரன்ஹாம் தம் கரங்களை தட்டி ஒலி எழுப்புகிறார்... ஆசி) கேட்கிறீர்களா? “ஆமென்” என்று சொல்லுங்கள் (ஜனங்கள் ஆமென் என்கின்றனர் ஆசி) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்)..“ஆமென்” என்று சொல்லுங்கள் “பிதாவே நான் உம்மை விசுவாசிக்கிறேன்” என்று சொல்லுங்கள் “ஆமென்” என்று சொல்லுங்கள் (ஆமென்) நான் தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லுங்கள் (நான் தேவனை நேசிக்கிறேன்) “நான் உம்மை சேவிப்பேன்” என்று சொல்லுங்கள்..?... இப்போது, உங்களுடைய பெயர் என்ன?... எங்கு வசிக்கிறீர்?... இங்கே போனிக்ஸிலா?........“